80 ஆண்டு கால தமிழ் சினிமா 1931-2011 - முதல் பாகம் சித்ரா லட்சுமணன் வெளியீடு: காயத்ரி பிரின்ட்டர்ஸ், H3E, இரண்டாவது தளம், பாரதிதாசன் காலனி, சென்னை-78. பக்கம்: 550 விலை: 500 முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா’ காலம் முதல் எம்.ஜி.ஆர். முதல்வரானது வரையிலான காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய ஆளுமைகளின் பங்களிப்பைப் பேசும் நூல். அப்போதே 'சந்திரலேகா’ பட விளம் பரத்துக்கு ஒதுக்கிய 25 லட்ச ரூபாய் பட்ஜெட், சினிமாவில் நடிப்பதற்கு முன் பணிப்பெண்ணாக இருந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி, அரசியல் வாய்ப்பு வந்தபோதும் புறக்கணித்த தியாகராஜ பாகவதர், 'மெட்ராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன்’ என்ற பெயரே சுருங்கி எம்.ஆர்.ராதா ஆனது, வேறு மெட்டு போடச்சொன்ன எம்.ஜி.ஆரிடம் 'நீங்களே இசையமைத்துக் கொள் ளுங்கள்’ என்று தன் ஆர்மோனியப் பெட்டியை காரில் எம்.எஸ்.விஸ்வ நாதன் அனுப்பியது, டைட்டிலில் தொழில்நுட்பக் கலைஞர்களின் புகைப்படங்களை முதன்முதலில் 'மணமகள்’ படத்தில் கலைவாணர் இடம் பெறச் செய்தது போன்ற. . .