த.முருகன், மந்தைவெளி. ''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' ''அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள்னு அழகான குடும்பம். ஊர் இங்கே தாம்பரம் பக்கத்துல பொழிச்சலூர். அந்த ஊரே என் சொந்தம்தான். எல்லோருமே சொந்தக்காரங்கதான். ஒவ்வொருத்தரையும் தனித் தனியா சொன்னா, எலெக்ஷன் ஓட்டர் லிஸ்ட் மாதிரி ஆகிடும். ரொம்பப் பெரிய குடும்பம். சந்தோஷமா இருக்கோம்!'' ஆ.ஜானகிராமன், நாச்சியார்கோவில். '' 'அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' ''ஜானகிராமன் நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்களா? அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் எப்படிங்க தொடர்ந்து நடிக்க முடியும்? மக்கள் என்கிட்ட எதிர்பார்க்கிற விஷயம் அதுல இல்லைனு சொன்னாங்க. அதான். . .