திருநங்கைகளை பெண்களாக மதிக்கும் மனப்பாங்கு மக்களுக்கு வரவேண்டும். உயிரியல்ரீதியாக பெண்ணாக இல்லாவிட்டாலும் இவர்கள் மனவியல்ரீதியாக பெண்களே. இங்கு கனடாவில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் பெண்களுக்கான அழகிப்போட்டியில் பங்குபெற தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். அழகிப்போட்டிகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. இதை உதாரணமாக நான் சொல்வதற்கு சமூகம் பொறுப்புணர்வுடன் மட்டுமல்லாமல் சமச்சீர் ஈடுபாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என்கிற காரணம் மட்டுமே. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி பெறுவதற்கே வழியில்லாமல் மாணவ சமுதாயம் அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. என்ன செய்வது? ஓடுங்கள் சந்தர்ப்பம் இருக்குமிடங்களுக்கு.