முயல் வளர்ப்பு...முழுமையாக முயற்சித்தால் முத்தான வருமானம் !
இறைச்சிக்கான கால்நடை வளர்ப்புத் தொழிலில் இறங்கி, கையைச் சுட்டுக் கொண்டவர்கள் பலர் உண்டு. குறிப்பாக, முயல் வளர்ப்பில் இறங்கிய பல விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால், முயல் வளர்ப்பு என்றாலே பலரும், 'வேண்டாம்’ என்றுதான் துள்ளி ஓடுவார்கள் முயலைவிட வேகமாக! ஆனால், இவர்களுக்கு மத்தியில் மிகுந்த முனைப்புடன் முயல் வளர்த்து, அதில் நல்ல லாபமும் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டம், வித்யா நகரைச் சேர்ந்த முரளிதரன். பசுமை நிறைந்த மரங்கள் சூழ்ந்திருந்த முயல் பண்ணையில், கூண்டுகளுக்குள் முயல்கள் ஓடித்திரிந்து கொண்டிருந்தன. அந்த ரம்மியமான சூழலில் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த முரளிதரனைச் சந்தித்தோம். ''எங்கப்பா 'லேப் டெக்னீசியன்’ வேலை பார்த்தாலும்... விவசாயத்தை விடாம செய்துகிட்டிருந்தார். விவசாயத்துல சம்பாதிச்ச பணத்துலதான், 'இன்ஜினீயரிங்’ படிக்க வெச்சார். படிப்பை முடிச்சுட்டு,. . .