'கிருஷி சிக்ஷா சம்மான்’ விருது..! வாகனங்கள் மற்றும் வேளாண் கருவிகள் தயாரிக்கும் 'மஹிந்திரா அண்டு மஹிந்திரா’ நிறுவனம்... விவசாய முன்னேற்றத்துக்குப் பணியாற்றும் தனிநபர்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த அறிவியல் மற்றும் விரிவாக்க நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், விருது வழங்கி வருகிறது. 2012-ம் ஆண்டுக்கான 'கிருஷி சிக்ஷா சம்மான்’ விருது, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் இயங்கும் வேளாண் அறிவியல் மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ''துல்லியப் பண்ணையத்தில் 'கோ (பி.ஹெச்)-2’ என்ற ரக கத்திரி சாகுபடியில் எங்கள் மையம் முன்னிறுத்திய நுட்பங்கள், விவசாயிகளுக்கு நல்ல பலனைக் கொடுத்தது. சிறப்பான மகசூல், பாசனநீர்ச் சேமிப்பு, நல்ல சந்தை விலை என பலவிதமான நன்மைகள் விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளன. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்பான நவீன மஞ்சள் வேகவைக்கும் கருவியை, தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்குக் கொண்டு சேர்த்ததன்மூலம்.... . .