எலும்பு டாக்டரின் பசுமைப் பாசம் !
எண்பத்தி ஏழாயிரம் மரக்கன்றுகள் நடப்போகிறோம்...'... '63 லட்சம் மரக்கன்றுகள் நடப்போகிறோம்...' -இப்படி சொல்லிக் கொள்வது, இப்போதெல்லாம் ஒரு 'கௌரவ'மாகவே ஆகிவிட்டது. இது, வரவேற்கக்கூடிய அம்சம்தான். ஆனால், ஒரு பேச்சுக்காக இப்படி சொல்லிவிட்டு, கடைசியில் விவசாயிகளின் தோட்டத்தில் நடப்பட்ட சவுக்கு மரங்களைக்கூட கணக்கில் சேர்த்து, காண்பித்துக் கொண்டிருப்பதை எப்படி ஏற்க முடியும்! நிஜத்தில் இதுதான் நடக்கிறது! புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் பிரசுரிப்பதோடு... இத்தகையோரின் சுற்றுச்சூழல் தொண்டு நிறைவடைந்து விடுகிறது! இவர்களுக்கு நடுவில், சொந்தச் செலவில் இருபது நபர்களுக்குச் சம்பளம் கொடுத்து, சென்னையின் பல இடங்களில் ஒருவர் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்றால், ஆச்சரியம்தானே! அவர்... சென்னையின் பிரபல எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர், வி. பார்த்தசாரதி. இந்த சேவைக்காக, 'கர்மவீரர் காமராஜர் விருது’ கொடுத்து கௌரவித்துள்ளது, தமிழக. . .