வைகாசி விசாகம் என்றதும் நம் நினைவுக்கு வரும் முருகன் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்கது திருச்செந்தூர். சர்க்கரையின் தித்திப்பை எழுத்திலே காணமுடியாததுபோல், இந்தப் புண்ணிய பூமியின் பெருமையை அனுபவித்தே பார்க்க வேண்டும் என்பது அன்பர்களின் ஏகோபித்த கருத்து. காரணம், ஸ்ரீசெந்தில் ஆண்டவனின் திருவருளும் அவன் கோயிலில் நிறைந்திருக்கும் தெய்வச் சிற்பங்களும்தான்! திருச்சீரலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் சிறப்புப் பெயர்கள் பெற்ற திருச்செந்தூரில், ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி தேவர்களுக்கு அபயம் அளித்து, சூரபத்மன் முதலான அசுரர் சுற்றம் ஒழித்து வெற்றி வீரராக வீற்றிருக்கும் ஆலயத்தைப் பாண்டிய மன்னன் விஸ்தாரமாகக் கட்டுவித்துத் திருப்பணிகள் செய்தான் என்று சொல்லப்படுகிறது. மிக அற்புதமாகத் திகழும் ஷண்முக விலாசத்தில் (மண்டபம்) துவங்கி அடுத்தடுத்து... துவார பாலகர்களான வீரவாகு- வீர மார்த்தாண்டர், ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜர் முதலாக ஆலயமெங்கும் தூண் சிற்பங்களாக. . .