எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது, பசி! ஆண்- பெண், பணக்காரர்- ஏழை, முதியவர்- குழந்தை, படித்தவன்- பாமரன், வெளிநாட்டுக்காரர்- உள் நாட்டுக்காரர் என்ற வேறுபாடு எல்லாம் அதற்குக் கிடையாது. உணவு இல்லாமல் எந்த ஜீவராசியும் வாழ முடியாது. பசியின் கொடுமையை உணர்ந்தே நம் இந்து மதத்தில் விரதம், பூஜை என்று எதுவாக இருந்தாலும், நான்கு பேருக்காவது சாப்பாடு போட்டுவிட்டு அதை நிறைவு செய்வதுதான் வழக்கம். அப்போதுதான், நாம் செய்யும் விரதமோ- பூஜையோ பலன் கொடுக்கும் என்பது நம்பிக்கை. அன்னதானத்தை விசேஷமாகச் சொல்வதும், பசிக் கொடுமையை உணர்ந்ததால்தான்! நீ....ட்டி முழக்கிக்கொண்டு போவானேன்! பசி, சாதாரண பாமர மக்களை மட்டுமல்ல; சர்வ வேதங்களிலும் கரை கண்ட மாமுனிவர்களையும் ஆட்டிப் படைத்திருக்கிறது. 'திரிசங்கு சொர்க்கம்’ என்று தனியாக ஒரு சொர்க்கத்தையே படைக்கக் கூடிய. . .