புதிய பகுதி - கரென்சி டிரேடிங்
கத்திரி வெயில் வறுத்தெடுக்க, ஊட்டி, கொடைக்கானல் என்று எங்காவது போய்வரலாம் என்றால் பணம் வேண்டுமே! ஆருயிர் நண்பன் செல்லுக்கு (செல்வம்) போன் செய்தேன். ''மார்க்கெட் இருக்கிற நிலைமையில மார்ஜின் மணி கட்டவே பணமில்லை. இதுல ஊட்டி ஒரு கேடா?'' என்று புலம்பினான். பேசிக் கொண்டிருக்கும் போதே செகண்ட் கால் ஒன்று வந்தது. புது நம்பர்; யாராக இருக்கும் என்று நினைத்து, அட்டன்ட் செய்தேன். ''என்ன கன்னு, நல்லாயிருக்கியா!'' என்று வீரப்பாவின் சிரிப்பில் ஷேருச்சாமியின் குரல் கணீரென்று கேட்டது. ஒரு நிமிடம் ஆடிப்போன நான், ''சாமி, நீங்...க..ளா? எப்ப ஊருக்கு வந்...தீங்..க...?'' என்றேன். ''அடேய், கத்திரி வெயில் கொடுமை சிங்கப்பூரிலேயும் தாங்க முடியலே. அதனால நேரா ஊட்டிக்கு வந்துட்டேன். நண்பரோட கெஸ்ட் ஹவுஸில இருக்கேன். எப்படி இருக்கான் உன் நண்பேன்டா செல்லு?. . .