ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்கள் - ஓர் அலசல்! கமாடிட்டி சந்தை, கரன்சி சந்தை, பங்குச் சந்தை என அனைத்து சந்தை களும் மேலும் கீழும் ஊசலாடிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், நிரந்தர வருமானம் தரக்கூடிய நல்ல முதலீடுகளை நாடிச் செல்வது நமது மனதிற்கு இயல்புதானே? நமது ஒவ்வொருவருடைய போர்ட்ஃபோலியோ விலும் கடன் முதலீடுகள் என்பது இன்றியமையாதது. கடன் முதலீடுகள் ஒருவரின் வாழ்க்கையிலும் ஸ்திரத் தன்மையைக் கொடுக்கிறது. கடன் முதலீடுகளில் பல வகை உள்ளது. கடன் முதலீடுகள் என்றதும் நம் அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் கள்தான். சிறிய முதலீட்டாளர் களுக்கு வங்கி டெபாசிட்கள் மிகவும் வசதியானது. ஆனால், ஓரளவுக்கு அதிக வருமானம் கொண்டவர்களுக்கு, குறிப் பிட்ட அளவுக்கு மேல் வருமான வரி கட்டுகிறவர்களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் அவ்வளவு லாபகரமானதாக அமையாது. ஃபிக்ஸட் டெபாசிட்களின் ஸ்திரத்தன்மையும், அதே சமயத்தில் குறைவான வருமான வரியும் உடைய ஒரு அருமையான முதலீட்டு உபகரணம்தான் எஃப்.எம்.பி.. . .