புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி # பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை # செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்


Comment count39
save
print A+     A-
வறுமையில் செம்மை... பிரமிக்க வைக்கும் ப்ளஸ் டூ பெண்கள் !

- சி.ஆனந்தகுமார், இ.கார்த்திகேயன், ஆ.கோமதி நாயகம், பூ.கொ.சரவணன்த.,சித்தார்த்
படங்கள்: எம்.ராமசாமி, ஏ.சிதம்பரம், ப.சரவணகுமார்

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில், வறுமைக்கு இடையிலும் வெற்றி மதிப்பெண்கள் பெற்றிருக்கும் 'மிஸ். தன்னம்பிக்கை’ மாணவிகள் சிலரைச் சந்தித்தோம். 'அறிவே சொத்து' என்று, இன்று தங்கள் குடும்பங்களுக்கு பெருமை தேடித் தந்திருக்கும் அந்த தங்கங்கள் பேசுகிறார்கள் இங்கு!

 'கஷ்டப்படுற ஒரு பொண்ணை படிக்க வைக்கணும்!'

செல்விமேரி (1,103 மதிப்பெண்கள் -  வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி, சென்னை):

''டென்த் பப்ளிக் எக்ஸாம்ல 91% மார்க் வாங்கியிருந்தேன். அந்த ரிசல்ட் வந்தன்னிக்குதான்... டெய்லரான எங்கப்பா, ரயில் விபத்துல இறந்தார். நானும் அம்மாவும் நிராதரவானோம். இந்த காஸ்ட்லி சிட்டி சென்னையில நாங்க ரெண்டு பேரும் படாதபாடில்லை. என் அப்பாவோட மரணச் சான்றிதழைக் காட்டினதும், எனக்கு இலவசக் கல்வி கொடுத்த கே.கே. நகர் வேளாங்கண்ணி ஸ்கூலை ஆயுசுக்கும் மறக்க முடியாது.

அம்மா, உடம்பு சரியில்லாதவங்க. அடிக்கடி ஃபிட்ஸ் வரும். தினமும் ஸ்கூல் விட்டு வந்ததும்... மூணாவது மாடியில இருக்கிற எங்க வீட்டுக்கு 20 குடம் தண்ணி அடிச்சு எடுத்து வெச்சுட்டு, அக்கம் பக்கத்துல இருக்கிற 20 பிள்ளைங்களுக்கு டியூஷன் எடுப்பேன். பிறகு, ரெண்டு மணி நேரம் படிப்பேன்.

இப்போ இன்ஜினீயரிங் கட் ஆஃப் 183. ஐ.டி... இல்லைனா, சி.எஸ்.இ படிக்கணும்னு கனவு. நல்ல வேலைக்குப் போய் அம்மாவைப் பத்திரமா பார்த்துக்கணும், என்னை மாதிரி படிக்க பணமில்லாமல் கஷ்டப்படுற ஒரு பெண்ணைப் படிக்க வைக்கணும்!''

'உசந்துகிட்டே இருப்பேன்!’

பிரியா, (1,049 மதிப்பெண்கள் - அரசு மேல்நிலைப்பள்ளி, செட்டிக்குளம், பெரம்பலூர் மாவட்டம்): ''என் உயரம் ரெண்டரை அடிதான். இப்போ மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள், பத்திரிகைக்காரங்க, ஆசிரியர்கள்னு எல்லோரும் பாராட்டுறதுல... கொஞ்சம் வளர்ந்துட்ட மாதிரி தோணுது. மூணு வயசோட என்னோட வளர்ச்சி நின்னுடுச்சு. என்னோட குட்டையான உருவம் காரணமா வெட்கப்பட்டுக்கிட்டு வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடந்தவள, எங்கப்பாதான் எடுத்துச் சொல்லி ஸ்கூல்ல சேர்த்துவிட்டார். பிள்ளைங்க கேலி பேசறப்பல்லாம், அழுது தீர்க்கற என்னை, மணிமொழி டீச்சர்தான் தேத்துவாங்க. 'நீ நல்லா படி... உன்னை எல்லோரும் திரும்பிப் பார்ப்பாங்க’னு தைரியப்படுத்தினாங்க.

ஆறாவது படிக்கறதுக்காக, பக்கத்து ஊர் ஸ்கூல் ஹாஸ்டல்ல சேர்ந்தப்போ, பிரபாவதி  ஃப்ரெண்டாச்சு. பன்னிரெண்டாம் வகுப்பு வரை ரெண்டு பேரும்தான் சேர்ந்து படிப்போம். மனப்பாடம் பண்ணாம, டிஸ்கஸ் பண்ணி படிப்போம். எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஞானசேகரன் சார், என் வகுப்பு ஆசிரியர்கள், அம்மா, அப்பா எல்லாரும் என்னோட கம்ப்யூட்டர் இன்ஜீனியர் கனவுக்குத் துணையா நின்னாங்க. இப்போ... அது நிறைவேறப் போகுது!''

'படிச்சே... நோயை விரட்டுவேன்!'

பார்வதிதேவி, (1,057 மதிப்பெண்கள் - விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி): ''பிறக்கும்போதே முதுகுத்தண்டுல பிரச்னையோட பிறந்தவ நான். ரெண்டு வயசுலயே முதல் ஆபரேஷனை சந்திச்சேன். இப்பக்கூட அப்பப்போ வலி இருக்கும். ப்ளஸ் ஒன்ல 'பயோ மேத்ஸ்' குரூப் எடுத்து, தாவரவியல், விலங்கியல் பாடத்துல படம் வரைய, ரெக்கார்ட் எழுத முடியாம மேத்ஸ் - காமர்ஸ் குரூப்புக்கு மாறினேன். அந்த சமயம் பார்த்து மறுபடியும் வலி படுத்தி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. தச்சுத் தொழிலாளியான அப்பா, அவர் நண்பர்கள் உதவியால ரொம்ப சிரமப்பட்டு பணம் ஏற்பாடு செய்ய, ஆபரேஷன் நடந்தது. அந்த வருஷம் ஸ்கூலுக்குப் போக முடியாம, அடுத்த வருஷம் மறுபடியும் ப்ளஸ் ஒன் சேர்ந்தேன். இப்போ ப்ளஸ் டூ-ல நல்ல மார்க் எடுத்திருக்கேன்.

சி.ஏ, ஐ.சி.டபுள்யூ.ஏ, ஏ.சி.எஸ், கம்பெனி செக்கரட்டரிஷிப்னு புரொஃபஷனல் கோர்ஸ் படிக்க ஆசை. அப்பாவால அவ்ளோ செலவு பண்ண முடியாது. எனக்கு அப்புறம் ரெண்டு தங்கச்சிங்க வேற இருக்காங்க. இப்போ பி.காம்., அப்ளிகேஷன் போட்டுருக்கேன். யாராவது உதவி பண்ணினா, விருப்பப்பட்டதை படிப்பேன். படிப்பாலயே போராடி, என்னோட நோயை ஜெயிப்பேன்!''

'ஆடு வித்த காசு, சி.ஏ படிக்க போதுமா?’

சத்யா (1,026 மதிப்பெண்கள் - காமராஜர் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவடி, தூத்துக்குடி மாவட்டம்): ''7 X 5 அளவில் ரெண்டு அறைகள் மட்டுமே உள்ள வீடு எங்களோடது. அப்பா பால்ராஜ், ஐஸ் வியாபாரி. அம்மா தனலட்சுமி, '100 நாள் வேலைத் திட்ட’த்துக்குப் போவாங்க. ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி. அப்பாவோட வருமானம், வீட்டுக்கு வர்றதே இல்ல. எல்லாமே அவரோட செலவுக்கே கரைஞ்சுடும். அம்மாதான் கஷ்டப்பட்டு எங்கள காப்பாத்திட்டிருக்காங்க. பரீட்சை நேரத்துல கூட, படிக்க விடாம சத்தம் போட்டுப் புலம்பிட்டே இருப்பாரு அப்பா. வேற வழி தெரியாம, ரூம்ல போட்டு பூட்டிட்டுதான் நான் படிச்சேன். பள்ளிக்கூடம் நாலு கிலோ மீட்டர் தூரம். கவர்மென்ட் கொடுத்த சைக்கிள்லதான் போவேன். என்னோட மார்க்கை பார்த்துட்டு... அம்மாவுக்குப் பழக்கமான ஒரு அக்கா, 'சி.ஏ படிச்சா நல்ல எதிர்காலம் இருக்கு’னு சொல்லியிருக்காங்க. அதனால, பி.காம். முடிச்சுட்டு, சி.ஏ படிக்கப் போறேன். இதுவரைக்கும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சதால ஃபீஸ் எல்லாம் கிடையாது. இனி என்ன செய்றதுனு தெரியல. 'வீட்டுல நிக்கற ரெண்டு ஆடுகள வித்தாவது படிக்க வைக்கிறேன்’னு அம்மா சொல்றாங்க. அந்தக் காசுல சி.ஏ வரை படிச்சுட முடியுமா?!''

'டியூஷனுக்கு வசதியில்ல... நம்பிக்கையும் இல்ல!’

முர்ஷிதா நஸ்ரின், (1,025 மதிப்பெண்கள் - அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பம்): ''எங்கப்பா டீக்கடை வெச்சுருக்கார். வீட்டுல மொத்தம் நாலு குழந்தைங்க. நான் ரெண்டாவது பொண்ணு. தினமும் வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டுத்தான் ஸ்கூலுக்குப் போவேன். அதுலயும் பொதுத்தேர்வு சமயம், ஆபரேஷன் பண்ணி படுத்த படுக்கை ஆயிட்டாங்க அம்மா. அவங்களையும், அப்பா, அண்ணன், தம்பி, தங்கச்சியையும், வீட்டையும் கவனிச்சுக்கிட்டே பரீட்சை எழுதினேன். 'நல்லா படிக்கிற புள்ளைய, இப்படி கஷ்டப்படுத்துறோமே'னு எங்கம்மா வருத்தப்படுவாங்க. இருந்தாலும் அவங்களுக்கும் வேற வழி இல்லையே!

இத்தனை நெருக்கடிக்கு நடுவுலயும் எங்க ஸ்கூல்ல செகண்ட் மார்க் எடுத்திருக்கேன். பாடத்தை மனசுல ஏத்துறதுக்கு முன்ன, எங்க குடும்ப கஷ்டத்தை மனசுல ஏத்தினதுதான் முக்கிய காரணம்! இதுவரைக்கும் டியூஷன் போனதே இல்ல. அதுக்கு வசதி இல்லைங்கிறது ஒரு பக்கமிருந்தாலும், அதுல எனக்கு நம்பிக்கையும் இல்ல. ராத்திரி, பகல் பார்க்காம படிச்சாலும், பவர் கட் ரொம்பவே படுத்திருச்சு. மெழுகுவத்தி வெளிச்சம்தான் கைகொடுத் துச்சு. என் வகுப்பாசிரியர் கிருஷ்ணகுமார் சார், இன் ஜினீயர் கனவை விதைச்சது, எனக்கு பெரிய உந்து சக்தியா இருந்துச்சு.

முர்ஷிதா நஸ்ரின் பி.இ... நிச்சயம் நடக்கும்ல!''


 மொத்தமும் ஒரே பள்ளிக்கு !

ப்ளஸ் டூ தேர்வில் தமிழகத்தில் 1,189 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்திருப்பவர்... நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம், எஸ்.சுஷ்மிதா. இவர் படித்தது எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில். 1,188 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது... அதே பள்ளியை சேர்ந்த டி.கார்த்திகா. இதே பள்ளியைச் சேர்ந்த பி.பிரபாசங்கரி 1,187 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதே மாவட்டத்தைச் சேர்ந்த க்ரீன் பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி மகேஸ்வரியும் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.


[ Top ]
siva1 Years ago
விகடன சார் நான் சத்யாவுடைய கல்விக்கு உதவி செய்கிறேன். தயவு செய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறவும். நன்றி
Abuthalib1 Years ago
சோதனைகளைத் தாண்டி சாதித்திருக்கிறார்கள்..
மனம் நிறைவாக உள்ளது..


இருந்தாலும் ஒரு சிறு குறை..
இதுபோன்ற தேர்வுக்களங்களில் (உலகம் முழுவதிலும்) ஆண்மக்கள் பெரும்பாலும் பிரகாசிப்பதில்லையே..?

தவறு எங்கு நிகழ்கிறது.. போதிப்பிலான அணுகுமுறையிலா, கற்றலிலான அணுகுமுறையிலா அல்லது வளர்ப்பிலான அணுகுமுறையிலா..?

உளவியல் ரீதியாக ஆராயவேண்டிய தருணம் இது..




aneesha1 Years ago
We senior citizens also want to part with some of our living expenses which are just enough for us. The idea is we came into decent living society with our hard working. These kind of channels for helps were not there then. So ,want to be the part of the society which is coming out for helping the aspiring kids..
thanks for publishing the above article.
kanna
siva1 Years ago
Please send the contact details. I will surely help some students.
Natarajan1 Years ago
well done my daughters god bless you all
Balu1 Years ago
பேசாம ஒரு பேபால் அக்கௌண்ட் விகடன் ஆரம்பிச்சு நாலஞ்சு தலைப்பு கொடுத்ததுன்னா நாங்க பணத்தை கிரடிட் பன்றதுக்கு ரெடி. அப்புறம் விகடன் தாத்தா நேர்மையாக எல்லாவற்றையும் பார்த்துக்குவர்ன்னு தெய்வ நம்பிக்கைதான்.. வாழ்க்கைன்னு வந்துட்டா யாரையாவது ஒருத்தரையாவது நம்பித்தான் ஆகவேண்டும்.. அது எங்கள் விகடனாக இருக்கட்டுமே.. இது என்னடா பெரும் வம்பாகப்போச்சுன்னு நீங்க நினைக்கலாம்.. ஆனால் தானே உதவியைத் தானேதான ஆரம்பீச்சீக.. அப்பவே சுழி போட்டாச்சு.. வழி தெரிஞ்சாச்சு.. நீங்க வழிக்கு வரணும்கிறதுதான் நடக்கணும்..
Venky1 Years ago
ஒரு வேண்டுகோள், இவர்கள் எல்லோரும் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்களே. இவர்களை போலவே பலர் அறிமுகமின்றி உள்ளனர். (the unlucky ones without a channel through magazines, media)

உணர்ச்சி வயப்படாமல் இவர்களை போன்றவர்களை - ஒரு முறை உதவி என்றில்லாது அவர்கள் படிப்பு முழுவதிற்கும் - தத்து எடுங்கள். அவர்களிடமிருந்து ஒரு ஒப்பந்தம் பெற வேண்டும். நல்ல மதிப்பெண் எடுப்பது மட்டுமின்றி, அவர்கள் ஊதியம் பெறுகையில் (when gainfully employed) இதே அளவிற்கு ஒருவர் (குறைந்தது ஒருவர்), இருவருக்கு உதவ வேண்டும் என்பதே. அதனை முடிந்தவரை வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க வேண்டும். இது ஹானர் சிஸ்டம். இங்கு உதவுபவரும், உதவி பெறுபவரிடமிருந்து எதையும் பெறக்கூடாது (நன்றி என்ற சொல்லை தவிர). எதிர்பார்ப்பு எதுவும் இன்றி, இப்படி செய்தால் ஒரு சில வேர்களாவது தழைக்கும். This is not my idea - there was a book and it was also made as a movie.

செய்வார்களா? அல்லது உணர்ச்சி ஊந்துதலில் பின்னூட்டமிட்டு விட்டு பிறகு ஒரு முறை உதவி செய்துவிட்டு மறந்து விடுவார்களா? That is even worse, because we raise the hope and drop them to address the next year's sob stories. That is horrible. We just give them hope and then abandon them in midstream. I have seen this many times.

பட்ட அனுபவத்தில் சொல்கிறேன். உதவி என்பது தொடர வேண்டும் அந்த காரியம் (பட்ட படிப்பு ஒன்று) முடியும்வரை. அந்த கமிட்மெண்ட் - உடன் ஒருவரை தத்து எடுக்கலாம். Repeat that cycle every three four years. அதன் மூலம் ஒருவரே பயன் பெறாது,. பலரும் பயன் பெறலாம் - தனிப்பட்ட திருப்தியும் கிட்டும். You have a face to relate to. A face, A direct result of your kindness.

சில, பல ட்ரஸ்ட்-களுக்கு நிதி வழங்குவது நல்லது எனினும் அவர்களின் தனிப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் (only a few are good) நன்கு அறியப்பட்ட ஒன்று. நம்மில் பலருக்கு நேரம் கிடைப்பதில்லை, பணம் தந்தால் போதும் என்று எண்ணி விடுகிறோம். ஒரு விதத்தில் அது சரி எனினும் -(for புயல் நிவாரணம், சுனாமி நிவாரணம் போன்று bigger operations) - கல்வி போன்ற விஷயங்களில் தனி கவனம் (கடிதம் மூலமாக) செலுத்துவது நல்லது, நல்ல விளைவை ஏற்படுத்தும்.

பள்ளி படிப்பு முடிந்து - கல்லூரி படிக்க பணத்திற்காக நான் போட்ட விண்ணப்பங்களையும் அதற்கு வந்த மறுப்புகளையும் நினைத்து பார்த்தே இதனை பதிக்கிறேன். நல்ல வேளை, எனக்கு மத்திய அரசின் உதவி தொகை கிடைத்தது. உதவி தரும் நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் எங்களை பிச்சைகாரர்களை போல நடத்தியதை எண்ணி இன்றும் கோபம் வருகிறது. கருணையற்றவர்களாக தோன்றினர் . அது போலவே அவர்களிடமிருந்து உதவி பெற்றவர்களும் - ஏதோ இலவசம் என்றே எண்ணினார்கள். திருப்ப வேண்டும் என்ற எண்ண்மில்லாது .. அதுவும் கல்லூரியில் உதவி தொகை பெற்றவர்கள் அதனை செல்விட்ட விதத்தை பார்க்கையில் - it made one really angry. The scholarship went for movies, drinks.

உதவி தொகை என்பது பெறப்படும் தரப்படும் ஒரு கடன் போன்றது. அதனை அது போல மற்றவர்களுக்கு தர வேண்டும் என்ற மனப்பான்மை வளர்த்து (ஒப்பந்தம் மூலம்) தர வேண்டும். செல்வி மேரி - க்கு அந்த எண்ணம் இருப்பது பாராட்டப்பட வேண்டியது..

I hope she keeps her word ..
B.Devanathan1 Years ago
Thanks to AVALVIKATAN,last year I was able yo help a bright and hardworking girl in her engg.studies-Sathya.She is the college topper this year.I will be paying all her educational needs throughout her BE.
If you could send these sprightly girls` details,I may be able to do something.

Thank you.
vinod1 Years ago
வாழ்க வளர்க.. இப்பொழுதெல்லாம் இது போல் கஷ்டபடுகிற மக்கள் படிக்கும் பள்ளிகளிலிருந்து தான் நல்ல மதிப்பெண்கள் வருகின்றன.. சென்னையில் ஒரு அட்மிஷனுக்கு பல லட்சம் வாங்கும் கேவலமான பள்ளிகளில் சேரும் மாணவர்கள் போதைக்கு மற்றும் ஏனைய கெட்ட பழக்கங்களுக்கு தான் அடிமையாகி குட்டிச்சுவராகின்றனர்.. பொதுமக்கள் சிந்திக்கவேண்டும்.
usha1 Years ago
இந்த பெண்களில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை,அத்தனையும் முத்துக்கள்,இவர்களால் வருங்கால தமிழகம் வெளிச்சமாக தெரிகிறது.அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
Uma1 Years ago
vikatan, do something to help these kids study. Education is the foundation of future India. We are there to fund the project. Can you send me email with particulars of these kids. I'm ready to support 1 or 2 in their education.
AAR1 Years ago
1. Standard of TN Examination is very poor compared to CBSE.
Question paper is very mild and straight from book. Nothing for the students to think and write - just mug up and write.
2. DMK and ADMK parties urge teachers to correct papers liberally to project good education during their rule.
3. Quality of students coming out of TN engineering colleges even Anna University is very bad. Fit only for software coding.
Students lack communication skills and professional behaviour is very bad.
4. No wonder hardly any progress in R
Daisy1 Years ago
வாழ்த்துக்கள் குழந்தைகளே. விகடன் முகவரி தந்தால் முயன்றது செய்வோம்.
kaeswar1 Years ago
Vikatan, please setup a education trust to help the economically weaker section. I am sure readers will stand with Vikatan.
vetri1 Years ago
We have an educational trust called "Just for Very Good Students". You can contact me at vetrivelgv@gmail.com. We help lot kids like the above mentioned kids.
Sridhar Krishnamurthy1 Years ago
அட்டகாசம்..தூள் கிளப்பிருக்காங்க..அகரம் அறக்கட்டளைக்கு எழுதுஙகள்..உதவி கிடைக்கும்..மேலும் நாமும் உதவுவோம்..விகடன் ஒரு வழி சொல்லவும்..
Selvan1 Years ago
Please provide the contact details of these remarkable students.They may get the deserving suppport from good natured people.
Selvan
sankar1 Years ago
Congrats to all.

I am visiting Chennai on 15 June 2012. Vikatan, please get me details of Seliv Meri. I would like to help for studies.
Vasanthi1 Years ago
Please give me the contact details of these children.
Cavitha1 Years ago
இப்போதே இவர்கள் பலருக்கு பாடம் சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள் தங்கள் சாதனையால். இனி உலகையே வியக்க வைக்கவேண்டும். வாழ்த்துக்கள்.
Madras1 Years ago
Beautiful .... wow ... Kudos kids. Vikatan, start a NON-PROFIT
Chandrasekaran1 Years ago
வால்துக்கல்
viswanathan1 Years ago
கலக்கியிருக்கீங்க சகோதரிகளா. மேலும் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள்.
seetharaman1 Years ago
இலவச சைக்கிள் உபயோகமாய் இருந்திருக்கிறது. மகிழ்ச்சி!
sankar1 Years ago
Congrats to every one. Please let know the contact details of Selvimari. I would like to help her for college studies. I am coming to Chennai on June 15. Let parent of Selvimari contact me through
 Displaying 1 - 25 of 35
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
19-ஜூன் -2012
சென்ற இதழ்
05-ஜூன் -2012

*Flip Version not supported in Devices