அந்த வீட்டுக்குள் நுழைந்ததும்... ஏதோ கலர்ஃபுல்லான வேறொரு உலகுக்குள் நுழைந்த உணர்வு. வீட்டில் தொங்குகிற கடிகாரம், பொம்மைகள், கூடை, கீ செயின் என எல்லாவற்றிலும் ஒரு பிரத்யேக வசீகரம். ''வெல்கம் சார்!' என கண்சிமிட்டி சிரிக்கிறார்கள் பிராப்தி மற்றும் பூர்வா. சென்னை, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி யின் முதலாமாண்டு பி.காம் மாணவி கள், இந்தத் தோழிகள். இவர்கள் இரு வரின் கைவண்ணம்தான் அந்த வீட்டின் எழிலைக் கூட்டி வைத்திருக்கிறது! ''நீங்க இப்ப பார்த்து பிரமிச்ச எல்லாப் பொருட்களுமே, முழுக்க பேப்ப ரால உருவானது. இதை 'குல்லிங்’னு (Quilling) சொல்வாங்க. பொழுதுபோக்கா ஆரம்பிச்சு, இப்போ இது எங்களுக்கு வருமானம் தர்ற ஒரு தொழிலா மாறினது... மிகப்பெரிய சந்தோஷம்!'' என்று ஆரம்பித்த பிராப்தி, ''ஒருநாள்... பூர்வா வீட்டுல டிஃபரென்ட்டா, க்யூட்டா இருந்த ஒரு. . .