நான் உடைத்த செல்போன்கள் கோபத்தில் செல்போன் உடைப்பது என் பழக்கமாகிவருகிறது ஐந்து முறை செல்போன்களையும் நான்கு முறை உடைக்கக் கூடாது என்கிற சபதங்களையும் அதற்குப் பலியாக்கியிருக்கிறேன் யாரிடமும் தீர்க்க முடியாத ஆற்றாமைக்கு எளிதில் கையில் கிடைக்கும் பொருள் செல்போன்தான் கோபத்தில் மற்றவர்களைத் தாக்குவது கொலை. செல்போனை உடைப்பது தற்கொலை ரத்தச் சேதமின்றி என் உறுப்புகளில் ஒன்றை அறுத்தெறிந்து சினம் ஆற்றிக்கொள்வதற்கு ஒப்பானது அது கோபத்தின் வலியையும் அதற்கான விலையையும் உடைந்து சிதறுகிற அதன் பாகங்கள் உணர்த்திவிடக்கூடும் உடையும்போது எழும் சத்தம் அதிலிருக்கும் எண்களுக்குரிய அனைத்து நபர்களின் ஒருமித்த அலறல்போல காதுகொள்ளாமல் ஒலிக்கக்கூடும் உடைந்த பின் உறையும் நிசப்தம் அத்தனை நபர்களின் ஒட்டுமொத்த மௌனத்தின் அழுத்தத்தையும் நிரப்பக்கூடும் அப்போது அழைக்க நேர்பவர்கள் என்னைத் தொடர்புகொள்ள முடியாதபோது நான் மரித்துவிட்டதைப் போல உணரும் ஒரு வெறுமை என்னையே தியாகம் செய்து கோபம் போக்கிக்கொண்டதாய் சற்று மனதை ஆற்றவும்கூடும் ஆயினும் பிரியமானவர்களின் எண்களும் குறுஞ்செய்திகளும் செல்லோடு. . .