ப்ரணீதா 'உதயன்’ படத்தில் உதயமாகி 'சகுனி’யில் தன் பெரு விழிகளால் கார்த்தியைக் காதலிக்கிறார். ''பளிச்னு இருக்கீங்க. ஃபிட்னெஸ் ரகசியம் சொல்லுங்க?'' ''பழங்கள், காய்கறிகள்னு ஆரோக்கியமான உணவு, நிம் மதியான தூக்கம் இருந்தாலே போதும். நீங்கதான் அழகுக் குட்டிச் செல்லம். தினமும் ஜிம் போங்க. இல்லைன்னா யோகா பண்ணுங்க. நீங்கதான் எவர்கிரீன் ஸ்மார்ட்!'' ''சமீபத்தில் என்ன படம் பார்த் தீங்க?'' ''டாம் க்ரூஸ் நடிச்ச 'மிஷன் இம்பாசிபிள்- 4. பரபர ஆக்ஷன் சினிமா.'' ''உங்க ஹாபி என்ன?'' ''புக்ஸ் படிப்பேன். அதுவும் சேத்தன் பகத் நாவல்னா, நாள் முழுக்க நகராமப் படிச்சு முடிப்பேன். 'ஃபைவ் பாய்ன்ட் சம் ஒன்’. இது சமீபத்தில் அவர் எழுதி, நான் படிச்ச புத்தகம். ரொம்ப அழகா, வாழ்க்கைக்கு குளோஸா இருக்கு. நகைச்சுவை, காதல்னு. . .