வளர்மதி... விண்வெளித் தமிழச்சி! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சீறிப் பாய்ந்த 'ரிசாட் 1’ (Radar Imaging Satellite) செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர். நம்ம அரியலூர் அக்கா. ''வாழ்த்துகள்'' சொன்னேன் வளர்மதிக்கு! ''நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே அரியலூர்தான். அப்போ அரியலூர் இன்னும் சின்னதா கிட்டத்தட்டக் கிராமம் மாதிரிதான் இருக்கும். நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படிச்சேன். கோவை அரசுக் கல்லூரியில் பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் சேர்ந்தப்போ, அந்தப் படிப்பும் நகரத்தின் பிரமாண்டமும் இன்னும் மனசில் இருக்கு. அப்புறம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. கம்யூனிகேஷன் சிஸ்டம்... வாழ்க்கையை அதன் சவால்களுடன் எதிர்கொள்ளும் தைரியம் வந்திருச்சு. எம்.இ. படிப்பில் நான் எடுத்த நல்ல ரேங்க் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போனது. இஸ்ரோவின் கதவுகள் எனக்காகத் திறந்துச்சு!''- அமைதியாக,. . .