பிபாஷாவிடம் இருந்து பிரிந்துவிட்ட ஜான் ஆப்ரஹாம் அடுத்த காதலில் சிக்கிவிட்டார். மும்பையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகரான ப்ரியா ரூஞ்சலுக்கும் ஜானுக்கும் சம்திங் சம்திங். 'சம்திங் அல்ல... எவ்ரிதிங்! இந்த வருஷ இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம்!’ என்று அறிவித்திருக்கிறது காதல் ஜோடி. நடத்துங்க! கடன் வாங்கியேனும் ஆடம்பரத் திருமணம் புரியும் 'இந்தியத் திருமண மரபு’க்கு ஓங்கி ஓர் அடி கொடுத்து இருக்கிறார்கள் குஜராத்தின் விஜய் கரோடி-சீமா கரேசியா தம்பதி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள், தங்களுடைய சமூகத்தினர் நடத்திய 35 ஜோடிகளுக்கான திருமணத்தில், தங்கள் திருமணத்தையும் முடித்து 'கல்யாணத்துக்காகச் செலவு செய்றதை மிச்சப்படுத்துங்க!’ என மெசேஜ் சொல்லி இருக்கிறார்கள். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? சீமா கரேசியா பள்ளி ஆசிரியை. விஜய் கரோடி ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஒன் குட் மெசேஜ் ரிசீவ்டு! அடுத்த வருடம் முழுக்க கோடம்பாக்கத்தில் 'இசைப் புயல்’! 'கடல்’, 'கோச்சடையான்’, 'யோஹன் - அத்தியாயம் 1’, கமல்,. . .