தட்டிவிடு... அடிச்சுவிடு... தாளிச்சிடு!
கொலைத் தொழில்... தமிழகத்தில் ஆட்சி - காட்சி மாறினாலும் எப்போதும் கொடி கட்டிப் பறக்கும் தொழில். கொலைகளைத் தடுப்பதும், கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போலீஸாருக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொல்லப்பட்டது மார்ச் மாதம் 29-ம் தேதி. சிட்டி கமிஷனர் தொடங்கி, சிறப்புப் பிரிவு வரை 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தினமும் 70 பேர் வரை கடுமையாக விசாரித்தும், உளவுத் துறையையும் பொறுப்பில் வைத்திருக்கும் தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இவர்களை வறுத்தெடுத்தும் விசாரணை வளையத்தில் இதுவரை உண்மையான குற்றவாளி சிக்க வில்லை. இந்த அரசியல் படுகொலைகள் எப்படி அரங்கேறுகின்றன? அதன் நெட்வொர்க் பின்னணி என்ன? 'தட்டிவுடு’, 'அடிச்சுவுடு’, 'தாளிச்சிடு’! ஒரு கொலைக்கான அசைன்மென்ட் எங்கே இருந்து. . .