எங்கள் வீட்டில் எல்லோருமே தூங்கும்போது குறட்டைவிடுகிறோம். இது என்ன பரம்பரை வியாதியா? 'ஸ்லீப் ஆப்னியா’ என்றால், பயப்படும்படியான மெடிக்கல் ப்ராப்ளமா? குறட்டை வருவது எதற்கான அறிகுறி? - இப்படி குறட்டையைப்பற்றி அடுக்கடுக்கான கேள்விகளோடு நிறையப் பேர் வருகிறார்கள். சுவாசமானது மூக்கு - வாய் - தொண்டை - மூச்சுக் குழாய் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. இந்தப் பாதையில் எங்கேனும் அடைப்பு ஏற்படும்போது, குறட்டைச் சத்தம் எழுகிறது. விழித்திருக்கும் நிலையில் வராத குறட்டைச் சத்தம், தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது? தூங்கும்போது உடலின் ஒவ்வொரு தசைப் பகுதியும் தத்தமது இயக்கத்தை நிறுத்திக்கொண்டு தளர்வான நிலையில் ஓய்வெடுக்கிறது. அந்த வகையில், தொண்டை, மூச்சுக் குழல் பகுதித் தசைகளும் தளர்ந்துவிடும்போது சுவாசப்பாதையின் அளவும் குறுகலாகிறது. இப்போது குறுகியப் பாதை வழியாக சுவாசக் காற்று. . .