Advertisement
ஜெய்தாப்பூரில் எதிர்ப்பு...கூடங்குளத்தில் ஆதரவு! தடுமாறுகிறதா சி.பி.எம்.?

'கூடங்குளம் அணுஉலையைத் திறக்க வேண்டும்’ என்று சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பேசி ​வரும் சி.பி.எம். கட்சியின் நிலைப்பாட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்தச்சூழலில், சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். 

''மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் அணு உலை வேண்டாம் என்கிறீர்கள். கூடங்குளம் அணு உலை வேண்டும் என்கிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா?''

''ஜெய்தாப்பூரில் அமையவுள்ள அணுஉலை, இதுவரை உலகில் எங்கும் சோதிக்கப்படாத தொழில்நுட்பம் கொண்டது. எனவே, அதை இங்கு அனுமதித்து, நம்முடைய மக்களைப் பரிசோதனை எலிகள் ஆக்குவதை ஏற்கவே முடியாது.ஜெய்தாப்பூர் உலைக்காக இப்போதுதான் நில எடுப்பு தொடங்கி இருக்கிறது. பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள், பிறமக்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த மாற்று வழியும் சொல்லப்படவில்லை. அதனால், ஜெய்தாப்பூர் அணுஉலைத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
கழுகார் பதில்கள்
வீடியோவில் சிக்கிய சீனியர் அமைச்சர்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 18
Profile

Cavitha 3 Years ago

கலைஞரை உத்தமர் என்றவர்கள்தானே இவர்கள்..... பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ருஷ்யர்களை கொன்ற ஸ்டாலின் படத்தை மாட்டி அழகு பார்ப்பவர்களாயிற்றே..... நிலம் கையகப்படுத்தி விட்டால் என்ன செய்தாலும் கேட்க மாட்டார்கள் போலும்.

 
Profile

SK 3 Years ago

>>''ஜெய்தாப்பூரில் அமையவுள்ள அணூலை, இதுவரை உலகில் எங்கும் சோதிக்கப்படாத தொழில்நுட்பம் கொண்டது<< ரஷ்ய அணுவுலை விபத்து பத்தி மறந்து போச்சா? வேணும்னா ஒரு தடவை அங்க போய் பார்த்துட்டு வந்து பேசுங்க...

 
Profile

senthilaan 3 Years ago

முல்லைப் பெரியாரில் துரோகம் இழைத்தவர்களிடம் இதை விட வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

 
Profile

Prakash 3 Years ago

அணூஉலை எதிர்பாளர்களுக்கு.....போனவாரம் பிரிட்டன் பிரான்சுடன் 21 அணு உலைகள் இங்கிலாந்தில் கட்டுவதர்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருக்கிறது

 
Profile

srinivasan 3 Years ago

கூடங்குளம் விவகாரத்தில் ஜெஜெ டிவி பஙகுதரார் கொடுக்கும் ப்ரெஸர் தான் காரணம் என்ற வதந்தி உன்மையா?விகடன் ஏன் அதை ஆராய முன் வரவில்லை

 
Profile

akbar ali 3 Years ago

லூசுப்பயல்

 
Profile

Umasankar 3 Years ago

ரஷ்யாவுக்கோ, சீனாவுக்கோ லாபம் கிடைக்கும்னா இந்தியா மேல குண்டு போடகூட அனுமதிப்பாங்க இந்த கம்யூனிஸ்டுகள். இதுதான் இவங்க லட்சணம்.

 
Profile

Murugiah 3 Years ago

சி.பி.எம். சீனக் கொடியின் கீழ். சி.பி.ஐ.-தான் ரசியக் கொடியின் கீழ். ரசியாவின் 'பவர்' பிளாண்ட் கூடங்குளத்தில். ஆனால் ரசியா 'பவர்' இழந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன.

 
Profile

Murugiah 3 Years ago

குத்துவிளக்கினால் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்கமுடியாதே.

 
Profile

Gurunathan 3 Years ago

குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல நங்கற பழமொழி இவங்களுக்காகதான் வந்துருக்கும் போல இருக்கு இந்த கம்யுனிஸ்ட் பொழப்புக்கு பேசாம சுண்டல் விக்க போலாம்

 
10.176.69.245:80