மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''
'அவர் வருவாரா... பிரிந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவர் வருவாரா?’... என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே கழுகார் ஆஜரானார். ''பொழிப்புரை வேண்டாம். செய்தியைச் சொல் லும்!'' என்று கோரிக்கை வைத்தோம். ''மன்னார்குடி குடும்பத்தில் நடக்கப்போகும் திருமணம் குறித்து கடந்த முறையே முன்னோட்ட மாகச் சில தகவல்களைச் சொன்னேன். சர்ச்சைக் குரிய மூன்று பேரான ம.நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர் படிப்படியாக வெளியே வந்து விட்டதால் இந்த சுபநிகழ்ச்சி அதிகப்படியான எதிர்பார்ப்பைக் கிளப்பி உள்ளது. ஜெயலலிதா- சசிகலா ஆகிய இருவரின் பிரிவோம் சந்திப்போம் நிகழ்ச்சிக்குப் பிறகு, நடக்கப் போகும் திருமணம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. பல்வேறு வழக்குகளில் ராவணன், திவாகரன், ம.நடராஜன் ஆகியோருக்கு அடுத்தடுத்து ஜாமீன் கிடைத்து விட்டது. அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்து விட்டனர்.. . .