'ஹரிதாஸ்’ எனது கனவுப்படம் என்று செப்பி வருகிறார் சிநேகா. திருமணத்துக்குப் பிறகு விருந்து கொடுக்க உறவினர்கள் பலரும் அழைக்க... எங்குமே செல்ல முடியாத அளவுக்கு படப்பிடிப்பில் பிஸியோ பிஸி. இந்தப் படத்துக்காக ஹனிமூன் டிரிப் பையே கேன்சல் செய்திருக்கும் சிநேகா, ஹரிதாஸ் என்ற சிறுவனுக்கு அழுகாச்சி அம்மாவாக வருகிறார். ஆர்ட் டைரக்டரான ராம்கி ராமகிருஷ்ணா, 'சொல்லி அடிப்பேன்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் ராம்கியை சொல்லாமல் அடித்துப் படுக்கவைத்துவிட்டது. மீண்டும் இப்போது 'இதயம் திரையரங்கம்’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். படம் முழுக்க 'வெண்ணிற ஆடை’ மூர்த்தி ஸ்டைலில் கதாநாயகியே டபுள் மீனிங் டயலாக்ஸை அவிழ்த்துவிடுகிறாராம். 'ஏ.ஆர்.முருகதாஸுக்கு 'ரமணா’ மூலம் பிரேக் கொடுத்தீங்க. அவர் கல்யாணத்தை நீங்கதான் கள்ளக்குறிச்சி போய் நடத்தி வச்சீங்க. அதனால சண்முகப் பாண்டியன் படத்தை முருகதாஸ் டைரக்ஷன் செஞ்சா, நல்ல ஓப்பனிங் கிடைக்கும். நீங்க சொன்னா மறுக்கவே மாட்டார்’ என்று கேப்டனிடம், குடும்பத்தார் கோரிக்கை வைக்கிறார்களாம். எப்படிக். . .