மிஸ்டர் கழுகு: டெல்லியில் பொய்திடும் ஐஸ் மழை!
''ராசா கையை வெச்சா... அது ராங்காப் போனதில்ல!'' - ஹம்மிங் செய்தபடியே ஆஜரானார் கழுகார்! ''இந்த இதழை வாசகர்கள் படித்துக்கொண்டு இருக்கும்போது, தமிழ்நாட்டு மண்ணைத் தொட்டிருப்பார் ஆ.ராசா. 15 மாதங்களுக்குப் பிறகு, ராசா தமிழகம் வருவதை, அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டமாக நடத்திக் காட்ட அணி திரட்டி வருகிறார்கள். அரசியல் ரீதியாக ராசா மீது விமர்சனம் இருந்தாலும், பெரம்பலூரில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எப்போதும் தக்க வைத்துக்கொண்டவர் ராசா. அதேபோன்று நீலகிரி தொகுதிக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பதிலும் சுணக்கம் இல்லாமல் செயல்பட்டு வந்தவர் என்பதால், தொகுதி மக்களிடமும் அவருக்கு கணிசமான வரவேற்பு இருக்கிறது. அதனால்தான், நீலகிரியில் சில நாட்களைக் கழிக்கத் திட்டமிட்டு உள்ளாராம் ராசா.'' ''அவரது தொகுதி அது. எனவே, நீலகிரியில் ஓய்வு எடுக்கிறார் என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா?''. . .
என்ன ஒரு பகுத்தறிவுச் செல்வம் தி.மு.க வில்