தமிழகம் முழுக்க மீண்டும் சூடு பிடித்திருக்கிறது ரியல் எஸ்டேட் பிஸினஸ். இதுநாள் வரை சொத்து வாங்குவதை தள்ளி வைத்து வந்த மக்கள், இப்போது மீண்டும் வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விளம்பரங்களைப் பார்த்து மயங்கியோ அல்லது எல்லோரும் வாங்கு கிறார்களே என்றோ இறங்கிவிடாமல், நாம் போடும் முதலீடு சரியான முதலீடுதானா, வாங்கும் இடத்தின் அல்லது வீட்டின் மதிப்பு இனி ஏற வாய்ப்பு இருக்கிறதா என்பதை எல்லாம் நன்றாக அலசிப் பார்த்து, அதன் பிறகு முதலீட்டு முடிவுக்கு வருவது தான் சரியாக இருக்கும். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும்போது சரியான நேரத்தில் சரியான பங்கை சரியான விலையில் வாங்க வேண்டும் என்பார்கள். அது ரியல் எஸ்டேட்டுக்கும் பொருந்தும். சரியான நேரம், சரியான இடம், சரியான விலை என அனைத்து அம்சங்களையும் பார்த்தே முதலீடு செய்ய வேண்டும். சரியான நேரமா?