ஈழு விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம் !
சிறு-குறு விவசாயிகள் தொடங்கி... பெரு விவசாயிகள் வரை; சாதாரண மெக்கானிக் வேலை பார்ப்பவர் தொடங்கி... தொழிற்சாலையில் மேலாளர் பதவியில் இருப்பவர் வரை; பெட்டிக்கடை வைத்திருப்பவர் தொடங்கி... பெரும் தொழிலதிபர் வரை அனைவருக்கும் உள்ள ஒரே சந்தேகம், 'ஈமு வளர்ப்பு லாபகரமானதா?’ என்பதுதான். இக்கேள்வியை எதிர் கொள்ளாத கால்நடைத்துறை வல்லுநர்களோ... விவசாய விஞ்ஞானிகளோ இருக்க முடியாது. அந்தளவுக்கு அனைவரையும் பாடாய்படுத்துகிறது, ஈமு பற்றிய சந்தேகங்கள். அதற்குக் காரணம்... 'ஒரு லட்சம் முதலீடு செய்தால்... மாதம் 10 ஆயிரம் ரூபாய்... மாதம் 11 ஆயிரம் ரூபாய்... என்றெல்லாம் விளம்பரங்கள் றெக்கை கட்டுவதுதான்! இந்தச் சூழ்நிலையில்... 'ஈமு வளர்ப்பு என்கிற பெயரில் விவசாயிகளும் மக்களும் சுரண்டப்படுகிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த அரசு என்ன செய்யப் போகிறது?' என்கிற கேள்வி சட்டசபையில். . .
ஈழு?? விளம்பரங்களைப்....