கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து பதில் சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன(?) சசிகலா அடுத்த ரவுண்ட் ஆட்டத்துக்குத் தயாராகி விட்டார். புதன்கிழமை காலையில் சென்னையில் இருந்து இளவரசி மற்றும் இளவரசியின் மருமகன் ராஜராஜனோடு கிளம்பி பெங்களூரு வந்தார். உளவுத்துறையை உளவு பார்த்த சசி! சென்னையில் தொடங்கி கோர்ட் நடவடிக்கை வரையிலும் மாநில உளவுத்துறை சசிகலாவை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்பதை எழுதி இருந்தோம். இந்தமுறை, உளவுத்துறை அட்ரியா ஓட்டலிலும் புகுந்து, சசிகலாவுக்காகக் காத்துக்கிடந்தது. இதை அறிந்துகொண்டோ என்னவோ, அவர்களுக்குத் தண்ணி காட்டிவிட்டு, இந்த முறை கேபிடல் ஓட்டலில் இளவரசியுடன் தங்கினார் சசிகலா. ஆனால், அட் ரியா ஓட்டலிலும் அறை போடப்பட்டுள்ளது. அந்த அறையைக் காலி செய்யாமல், அங்கு தனக்கு வேண்டப்பட்டவர்களை தங்கவைத்தார் சசிகலா. அவர்களை விட்டு. . .