''சுவையை வைத்தே சொல்லலாம் நோயை!''
மருந்து மாத்திரைகள் இன்றி உடலில் உள்ள உயிர்ச் சக்தியை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு குணம் அளிக்கும் மாற்று மருத்துவ முறைகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. அதில், முக்கிய இடத்தில் இருப்பது அக்குபஞ்சர். தொடு சிகிச்சைமுறையைக்கொண்ட இந்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் தீர்வு உண்டு. குறிப்பாக நாள்பட்ட நோய்களுக்கு. ஊசியைப் பயன்படுத்தாமல், வெறும் தொடுதல் மூலம் சிகிச்சை அளித்து வரும் அக்குபஞ்சர் டாக்டர் க.தனசேகரன் விரிவாகப் பேசிய விஷயங்கள் அப்படியே இங்கே... 'உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்த மருத்துவ முறை அக்குபஞ்சர். எனவே, இது மாயமந்திரம் இல்லை; முழுமையான அறிவியல். அக்குபஞ்சர் என்ற லத்தீன் வார்த்தை... அக்கியூட்டஸ், பஞ்சுரா என்று பிரிக்கப்படும். இதற்கு குத்துதல் என்பதுடன், சரியான எண்ணத்தோடு தூண்டுதல் என்றும் பொருள். அக்குபஞ்சரில் நீடில், விரல். . .