கலாமின் இலங்கை அவதாரம்! இரு கடலோர நிலவரம்

ர்வரோக நிவாரணி போல, சமீபமாக பல பிரச்னைகளுக்கு இந்திய அரசின் பிராண்ட் அம்பாசிடர் போல ஆகிவிட்டார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். திடீரென, கடந்த வாரம் இலங்கை சென்றவர், இருதரப்பு மீன்பிடிப்பு தொடர் பாக ஒரு தீர்வைச் சொல்ல... பிரச்னை பற்றிக் கொண்டுள்ளது. 

''இந்திய, இலங்கை நாடுகளின் மொத்தக் கடல் பரப்பும் இருநாட்டு மீனவர்களுக்கும் பொதுவானது. இதில், வாரத்துக்கு மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் மற்ற மூன்று நாட்களில் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கலாம். ஒருநாள் பொதுஓய்வு எடுத்துக்கொள்ளலாம்'' என்பதுதான் கலாம் சொன்ன யோசனை.

கலாமின் இந்தக் கருத்துக்கு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

''ராமேஸ்வரம் மண்ணின் மைந்தர் என்பதால், மீனவர் பிரச்னையைப் பற்றிப் பேசுவதாகச் சொல் லும் இவர், இதுநாள் வரையில் அப்படி ஒரு பிரச்னை இருப்பதாகவே வெளியில் காட்டிக் கொள்ளவி

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
ராவணனுக்கு நான் ஒரு டைப்பிஸ்ட்!
வந்து கலக்கிய வின்ஃப்ரே... வராமல் கலக்கிய ரஷ்டி!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 72
Profile

priya 3 Years ago

நமக்கு ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி? நன்றாக உள்ளது தமிழா

 
Profile

Senthil 3 Years ago

இதை சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சேன். இன்னிக்கு சொல்லிட்டேன். எனக்கு தெரிஞ்ச தீர்வு:

1. இந்திய-இலங்கை இடைய உள்ள சர்வதேச எல்லையை வரையறுத்து, இரு சாராரும் மறு உறுதி படுத்தவேண்டும்.

2. அனைத்து இந்திய-இலங்கை சேர்ந்த மீன்பிடி படகுகளில் ஜிபிஎஸ் சாதனம் பொருத்தி, படகுகள் பயணிக்கும் பாதையை சர்வதேச எல்லை வரைபடத்துடன் சேர்த்து ட்ராக் செய்யவும்.

3. எந்த ஒரு படகு எல்லை மீறி சென்றாலும், சமிக்கை அனுப்பி எச்சரிக்கும் வசதியை ஜிபிஎஸ் சிஸ்டத்துடன் இணைக்க வேண்டும்.

4. இரு நாட்டு கடற்படைகளும், இதனை கண்கானிக்கவேண்டும்.

பிகு: ஜிபிஎஸ் உபயோகம் உலகம் முழுவதும் இலவசம் (இது சாதாரண மொபைல் நெட்வொர்க்குடன் தொடர்பில்லாமல், தனித்து எல்லை கடந்து செயல் படகூடியது) பூமியின் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக கிடைக்கும் சேவை. செலவு அதிகமில்லை, இப்போதெல்லாம் ஜிபிஎஸ் மாட்யூல் அனேக செல்போன்களில் வந்துவிட்டது.

மனமிருந்தால் மார்கம் பலவுண்டு! - மதி, சிங்கை

 
Profile

THAMIZH UK 3 Years ago

எப்போது ராஜபக்சவை சந்தித்தாரோ அப்போதே திருமாவளவனையும் ஈழம் ஒதுக்கிவிட்டது. மற்றவர்கள் பிறப்பில் இருந்தே தன்னலவாதிகள் ஆதலால் அவர்களை எப்போதும் கணக்கெடுத்ததில்லை.... நன்றிகள் வாகீஸன்....

எப்படி எப்படி..... இந்த அப்புரோஃச் எனக்கு நன்கு பிடித்து இருக்கு.... ஆம்.... நானும் பேச மாட்டேன் யாரும் பேச கூடாது.... சண்டை போடவும் முடியாது( வெல்லவும்முடியாது) சமாதானம் பேசவும் முடியாது ...வேறு ஒருவரும் பேசவும் கூடாது பேசினால் துரோகி....

ஏன் ... இப்படி.... உங்கள் வருமானத்தில் அடிவிழுமா???... பல ஆயிரம் அப்பாவி மக்கள் அழிவில் உங்களுக்கு குதுகலம் கேட்கிறது... ரொம்ப நல்ல இருக்கு....

எல்லாரும் ஜோர கைதட்டுங்க பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடக்க போகுது என புருடா விட்டு 30 வருட காலம் ஓட்டியது போதும்....இப்போது உங்க பாம்பும் காலி...மஸ்த்தானும் காலி....

மற்றவர்கள் பிழைக்க நீங்கள் வழி செய்ய வேண்டாம் .... அவர்கலை வாழ வழி விட்டலே போதும்... அவர்கள் பிழைத்து கொள்ளுவார்கள்....

 
Profile

Vijay_USA 3 Years ago

இவர் நாடு போற்றும் விஞ்ஞானியாக இருக்கட்டும் - ஒரு தமிழனாகவும் இருந்திருக்கலாமில்லையா?

 
Profile

அம்மா என் தெய்வம் வல்லம் தமிழ் 3 Years ago

கலாமுக்கு தேவையில்லை இந்த வேலை

 
Profile

vaikundamurthy 3 Years ago

மீனாட்சி, முதலில் நீங்கள் இந்தியரா இல்லையா எனத் தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. ஒரு நாடு இன்னொரு நாடின் மீது கட்டுப்பாடு வைத்திருப்பதை யாரும் தவறுன்னு சொல்வதில்லை. நான் சொல்ல வந்தது அடிமையாக இல்லை, ஆங்கிலத்தில் சொல்வதானால் இன்புளூயன்ஸ். இதை உலகின் எல்லா நாடுகளும் தன் ஆதரவான நாடுகளின் மீது செலுத்துகின்றன. அதெல்லாம் தவறுன்னு உத்தம் வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்க தேவையில்லை. ஏன்னா உலக அரசியல் அப்படித்தான் இயங்குகிறது.

இரண்டாவது, ராமேஸ்வர மீனவர்கள் செய்வதை நான் எங்கே ஆதரித்தேன். இருனாட்டு மீனவர்களும் வாழனும்னு சொல்ற கலாமின் யோசனையை ஆதரித்தேன். இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களின் மேல் எவ்வளவு வெறுப்புடன் இருக்கிறார்கள்ன்னு சுட்டிக்காட்டினேன். ஏன்னா இங்க அரசியலில் இந்திய மீன்வர்கள் சிங்கள அரசால் மட்டுமே வெறுக்கப்படுவது போல் சித்தரிக்கப்படுகிறது.

நீங்கள் புலம் பெயர்ந்த தமிழரானால், உங்களால்தான் இன்று சீனர்கள் இலங்கையில் நடமாடுகின்றனர். நீங்கள் தமிழ்னாட்டின் மூலம் மத்திய அரசுக்கு கொடுக்கும் அழுத்தத்தினால் இந்திய அரசு செயல்படாமல் சீனர்களை காலுன்ற வைத்துள்ளது. நீங்கள் இந்தியாவை பற்றியும் கவலைப்படமாட்டீர்கள், ஈழத்தில் தவிக்கும் அப்பாவி தமிழர்களைப் பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். போர் என்ற பெயரில் உசுப்பிவிட்டு அப்பாவிகள் மரணத்திற்கு காரணமாகிவிட்டீர்கள். நாங்கள் இந்தியாவுக்கு எது நல்லதோ, ஈழத்தமிழர்கள் வாழ எது நல்லதோ அதைத்தான் ஆதரிப்போம். உங்கள் விருப்படி இந்தியா இயங்கனும்னு எதிர்பாக்க வேண்டாம்.

 
Profile

Meenadchi 3 Years ago

வைகுண்டமுர்த்தி இலங்கை ஒரு தனி நாடு ஏன் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். ஏன் கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள். உங்களுக்கு என்ன அதிகாரம் உண்டு அவர்களை கட்டுபடுத்த. இதில் புலம் பெயர்ந்த தமிழனைப பற்றி கமென்ட் வேறா.
ராமேஸ்வரம் கடலோர விசைப்படகு மீனவர் நலச் சங்கத்தின் ஆலோசகர் தேவதாஸ்கூட இந்திய மீனவரிடம் ட்ராலர் படகுகள் அதிகம் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் அதன் விளைவுகலை அறிந்தும் தடுக்காதது ஏன் முதலில் உமது தமிழகத்தை மலையாளியிடம் இருந்து காப்பாற்றும்

 
Profile

Maha 3 Years ago

அப்துல் கலாம் அவர்கள் காங்கிரஸ் ஏஜண்டாக உள்ளார்.
சோனியா காங்கிரஸ் ராஜிவ்க்காக ஈழத்தமிழ்ரகளை பழிவாங்குகிறது.
இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

தமிழக மீனவர்கள் இழுவை மடி வலையுடன் ட்ராலர் படகுகளை தவிற்ப்பதுதான் முதல் தீர்வு.

 
Profile

Ramanathan 3 Years ago

முரு, உங்கள் கருத்து தவறு. கலாம் ஒரு மேதை. அவர் இந்தியாவிற்கு செய்திருக்கும் சேவை அளவிட முடியாதது. அவர் ஒரு சிறந்த மனிதர், விஞ்ஞானி, ஆசிரியர். ஒரு சில கருத்து வேறுபடுவதால் அவரை நிந்திக்கக் கூடாது.

 
Profile

அன்பு 3 Years ago

"இந்திய-தமிழக மீனவர்கள் இழுவை மடி வலையுடன் ட்ராலர் படகுகள் மூலம்தான், எங்களின் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கிறார்கள். இதனால், வடபகுதியில் உள்ள மூன்று லட்சம் பேரின் ஒரே வாழ்வாதாரமான மீன்வளம் அதிவேகமாக அழிக்கப்பட்டு வருகிறது."-----------> வைகோ, சைமன், திருமா, நெடுமாறன் ஆகியோரிடம் சொல்லுங்கள்.

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80