மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்!
மின் கட்டண உயர்வால் தமிழகமே அதிர்ந்துபோய் நிற்கிறது. கொஞ்ச நேரமே மின்சாரம் கிடைத்தாலும், ஓடோடிப் போய் லைட்டுகளை அணைப்பதும், ஃபேன்களை நிறுத்துவதுமாக இருக் கிறார்கள் மக்கள். ஆனால், அமைச் சர்களின் வீடுகள் மின்தடையே இல்லாமல், மின்கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல் எந்த நேர மும் ஜொலிஜொலிக்கின்றன. அதுசரி, அவர்கள் நிம்மதியாக வேலை பார்த்தால்தானே, மக்கள் குறைகளைத் தீர்க்க முடியும்? சென்னை அடையாறு பகுதியில் பங்களா டைப்பில் இருக்கும் அரசு இல்லங்களில்தான் அமைச்சர்கள் குடியிருக்கிறார்கள். மிகப்பெரிய ஹால், கிச்சன், டைனிங் ஹால், ஆபீஸ் ரூம், ரீடிங் ரூம், ஜிம் என்று இரண்டு தளங்கள் வரையில் கட்டப்பட்ட தனித்தனி வீடுகளைச் சுற்றிலும் போதுமான இட வசதி உண்டு. அமைச்சர்கள் இல்லங்களின் முன்பு விசாலமான நிலப்பரப்பு, தோட்டம், போர்ட்டிகோ, கார் பார்க்கிங். . .