சகாயத்தின் திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்! நாமக்கல் கலெக்டர் ஒப்புதல் வாக்குமூலம்

'நாமக்கல்லில் சகாயம் கலெக்டராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் என்பதாலேயே, பல நல்ல விஷ யங்களை முடக்கி விட்டார்கள். நேரில் வந்தால் நிறைய தகவல்கள் தருகிறேன்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) அழைப்பு வந்தது. 

நமக்குப் புகார் சொல்லி இருந்த நாமக்கல் நகர அரிமா சங்க உறுப்பினரும், சர்வகட்சி ஒருங் கிணைப்புக் குழுத் தலைவருமான வாசு சீனிவாசனைச் சந்தித்தோம். ''நாமக்கல் மாவட்டத்தில் சகாயம் கலெக்டராக இருந்தபோது, உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பராமரிக்கவும் புறம் போக்கு நிலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டம் போட்டி இருந்தார். அதற்கு, அரிமா சங்கத்தின் உதவியைக் கேட்டிருந்தார். கலெக் டரின் ஆர்வத்தைப் பார்த்து நாங் களும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து லத்துவாடி பஞ்சாயத்தில் 400 மரக்கன்றுகளை நட்டோம். தொடர்ந்து அவற்றைப் பராமரித

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
மோசடி செய்தாரா கரூர் சின்னசாமி?
கொலையாளியைக் காப்பாற்றினாரா முன்னாள் அமைச்சர்?
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 51
Profile

மாயவரத்தான்.... 3 Years ago

இங்கே ஒருவர் ஏதோ இந்த குமரகுருபரன் தான் UPSC பாஸ் செய்து கலெக்டர் ஆன மாதிரியும், சகாயம் ப்ரமோஷனில் கலெக்டராக பதவிக்கு வந்த மாதிரியும் கதை கிளப்பி விட்ட்டிருக்கிறார். ஆனான் நானறிந்த வகையில் 1989-ம் ஆண்டு சென்னை அண்ணாநகர் ஐ.ஏ.எஸ். கோச்சிங் செண்டரில் படித்த எழுபது சொச்சம் பேரில் UPSC தேர்வில் வெற்றி பெற்றவர் சகாயம் ஒருவரே. அப்போது அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கும் சென்று கொண்டிருந்தார். வெற்றி பெற்றாலும் மிக மிக நூலிழை வித்தியாசத்தில் ஐஏஎஸ் ஆகாமல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சுமார் ஓராண்டு காலம் பணியமர்த்தப்பட்டார். பிறகு மீண்டும் வந்து UPSC-யை விட சிரமமான க்ரூப் 1 தேர்வும் எழுதி அதில் வெற்றி பெற்று சப்-கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். இது தான் உண்மை. ஆனால் வேண்டுமென்றே சிலர் அவர் ஏதோ வருவாய்த்துறையில் ப்ரமோஷனில் கலெக்டராக வந்து விட்டதாக அவ்வப்போது கதை கிளப்பி விடுவது வயிற்றெரிச்சலில் இல்லாமல் வேறு என்னவாம்?

 
Profile

Tamil 3 Years ago

குளறுபுத்தி குமரகுருபரரே, நல்லதை யார் செய்தாலும் அதற்கு உதவி செய்யனும்... இதை நான் சொல்லலை எங்க வீட்டு பாப்பா சொல்லுது...

 
Profile

mHn 3 Years ago

''யார் கொண்டு வந்ததாக இருந்தால் என்ன... நல்ல திட்டங்களை எல்லோரும் செயல் படுத்தலாமே ''

அரசு எவ்வழி அதிகாரிகள் அவ்வழி

 
Profile

senthil.sarangan 3 Years ago

கலெக்டர் குமரகுருபரனுக்கு குமர குதிரைபரன் என்று வாசகர்கள் சார்பாக பட்டமளிக்க விரும்புகிறேன் -குதிரைக்கு லகான் போட்டது போல அரசு திட்டங்களை மட்டுமே செயல் படுத்துவேன் என்பதால்.

 
Profile

karu 3 Years ago

இவருக்கு சகாயம் பேரக்கேட்டதுமே பின்னாடி எரிஞ்சு தீஞ்சு போயிருக்கு... அது குமரகுருபரனின் பேச்சிலேயே நல்லாத்தெரியுது... குமரா உங்கள போல சிறு புத்தி அதிகாரிகள் இந்த உலகை பின்னுக்கு இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

 
Profile

Yuva 3 Years ago

என்னதான் நல்ல திட்டங்களாக இருந்தாலும், குமரகுருபரனின் விளக்கத்தில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்திட்டங்களால், மாவட்ட நிர்வாகத்தின் வேலைப் பளு கூடுதலாகும் என்று கூட நினைத்திருக்கலாம். அதுவுமில்லாமல், இவை நல்ல திட்டங்களாக இருப்பின், மக்களே முன்னெடுத்து நடத்துவதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? மரக்கன்றுகள் நடப்பட்டது புறம்போக்கா, பட்டா நிலமா என்கிற குழப்பம் இங்கு எழுவது தவிர்க்க முடியாதது.

 
Profile

Sen 3 Years ago

வெட்டி ஈகோ கலெக்டர். இவனெல்லாம் எப்படிப்பா கலெக்டராகிறான் நம்ம ஊருல?

 
Profile

Tamil 3 Years ago

அய்யா குமரகுருபரன் என்று பெயர் வைத்து கொண்டு ஏன் இவ்வளவு மட்டமாக நடந்து கொள்கிறீர்கள்?? நல்லதை யார் செய்தால் என்ன?? ஏன் இபப்டி ஆங்காரமாக அவுங்க செஞ்ச நல்லதை நான் ஆதரிக்க மாட்டேன், அரசாங்கம் கொண்டு வரும் கமிஷன் அடிக்கும் திட்டங்களை மட்டும் தான் ஆதரிப்பேன் என்று சொல்கிறீர்கள்??? குமரகுருபரனை தூக்கி ஏதாவது ஒரு டம்மி போஸ்டில் போட்டு, நாமக்கல் மக்களை காப்பாறும் படியான ஒரு நல்ல அதிகாரியை மாவட்ட ஆட்சியாளராக ஜெயா அவர்கள் நியமிப்பாரா???

 
Profile

Siva.G 3 Years ago

இந்த ஆளெல்லாம் கலெக்டரா....இதைப்போலவே எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தொடங்கப்பட்டக் காலத்தில் கலெக்டராக இருந்த திரு. சந்தோஷ்குமார் அவர்கள் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார்...ஆனால் அவருக்குப் பின்னால் வந்த எந்தக் கலெக்டரும் அவற்றை செயல்படுத்தவில்லை.

சகாயம், சந்தோஷ்குமார் போன்ற கலெக்டர்கள் இருக்கும் இந்த மண்ணில்தான் இந்தக் குமரகுருபரனைப் போன்றவர்களும் இருக்கிறார்கள்....எல்லாம் நம் தலைவிதி.

 
Profile

chandra 3 Years ago

குமர குருபன் கண் இருந்தும் குருடனாக இருப்பது எதனால்? அரசின் திட்டங்களை கிளார்க்கை வைத்தே செயல்படுத்த முடியும் ஐஏஸ் தேவையில்லை. தனக்கு சுயமாக சிந்தித்து நல்ல திட்டங்கள் உருவாக்கத் தெரியவில்லை என்றாலும் தனிப்பட்ட ஒருவரின் எண்ணத்தில் உருவான மக்களுக்கு பயன் உள்ள திட்டங்களை செயல்படுத்த தெரியாத இந்த குமர குருபன் கலெக்டராக பணியாற்றுவது மக்கள் நலனுக்காக அல்ல. இந்த ஆளை அரசின் திட்டங்களை செயல்படுத்தும் டிக்கட் கலெக்டராக எங்கேயாவது மாற்றினால் நல்லது...........................டிக்கட் கலக்டாராக கூட தகுதி இல்லை...பேசாமல் அம்மா கட்சியில் சேர்ந்து பூம் பூம் மாடு மாதிரி அமைச்சாராகிவிட சொல்லலாம்

 
placeholder
Advertisement
placeholder
10.176.68.62:80