அம்மா... அப்பா... நடுவில் குழந்தை...
தேவை, எச்சரிக்கை ! தாயின் இறகுச் சூட்டில் இதம் பெறும் குஞ்சுப் பறவை போல, பெற்றோருடன் தங்களை இறுக்கிக் கொண்டு தூங்கும் குழந்தைகள் நிறைய. தாய்ப்பாலுக்காகவும் அரவணைப்புக்காகவும் அழும் பிஞ்சு சிசு முதல், 'பெட் டைம் ஸ்டோரீஸ்' கேட்டபடி அம்மா மீதோ... அப்பா மீதோ கால் போட்டால்தான் தூக்கமே வரும் என அடம் பிடிக்கும் சற்றே வளர்ந்த பிள்ளைகள் வரை... பெற்றோருடன் பெட்ரூமில் குழந்தைகளின் ஆக்கிரமிப்பு எப்போதும் உண்டு. ஆனால், இப்படி பெற்றோருடன் உறங்கும் குழந்தைகளின் உடல், மனநலம் குறித்த அக்கறையில் இன்னொரு அதிர்ச்சிகரமான பக்கமும் இருக்கிறது என்றால், அலறத்தானே வேண்டியிருக்கும்! முதலில் உடல் நலம் பற்றிப் பார்ப்போம். பிறந்தது முதல் ஒன்று அல்லது ஒன்றரை வயது வரை குழந்தைகளின் மத்தியில் நிகழும் காரணம் அறியப்படாத மரணங்களை. . .