ஐ.ஐ.டி- யை கலக்கிய அழகப்பா !
காரைக்குடி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்... பின்னி பெடலெடுத்திருப்பது... சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தைதான்! அட ஆமாங்க.... சென்னையின் ஊரக தொழில்நுட்ப மற்றும் தொழில் காப்பகம், தேசிய இணையப் பரிமாற்றகம் ஆகியவை இணைந்து தமிழக அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடத்திய 'நம்ம ஊரு’ எனும் வெப்சைட் போட்டியில் அசத்தியிருக்கிறார்கள்... 'அழகப்பா' மாணவர்கள்! முதல் பரிசாக 75 ஆயிரம் ரூபாயை தட்டி இருக்கும் அந்த சரவெடிப் பேச்சுக்காரர் களுடனான சந்தோஷச் சந்திப்பு இது! ''நான் சேலம் மதுமதி. இவ புதுக்கோட்டை மீனாட்சி. அவன் 'பட்டிக்காட்டு’ சென்னை கார்த்தி. மூணு பேரும் காரைக்குடி அழகப்பா இன்ஜினீயரிங் காலேஜ்ல மூணாம் வருஷம் பி.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் கிளாஸ்ல ஒண்ணா உட்கார்ந்து, அப்பப்போ படிச்சுட்டு இருந்தோம். ஒருநாள், 'ஏதாவது ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து,. . .