# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #

( கேள்வி பதில் - சுகி சிவம் )

"தியானம், பிரார்த்தனை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

பிரார்த்தனையில், நீங்கள் + கடவுள் + ஏதோ சில கோரிக்கைகள் என்ற மூன்றுமே ஆரம்பத்தில் வட்டமடிக் கின்றன. நேரமாக நேரமாக இவை மூன்றும் மேலும் மேலும் கடினம் அடைகின்றன. உரு ஏறுகின்றன.

 

தியானத்தின் ஆரம்பத்தில், எண்ணங்கள் + நீங்கள் + கடவுள் மூன்றுமே வட்டமடிக்கின்றன. கொஞ்சம் கொஞ்ச மாக எண்ணங்கள் மறைந்து, நீங்கள் கரைந்து, முடிவில் கடவுள் மட்டுமே அங்கு எஞ்சுகிறது.!

( சக்தி விகடன் - 02.07.2008 )
 


.......................................................................................................................!!!!

கேள்வி - பதில்

எட்டு வயது வரையிலும் ஒருவனுக்கு நிகழும் இன்ப- துன்பங்களுக்குக் காரணம், அவன் பெற்றோரின் வினை. 8 வயதுக்குப் பிறகான நிகழ்வுகளுக்கு அவனது முன்வினையே காரணம் என்று விவரித்தார் சொற்பொழிவாளர் ஒருவர். எனில், பெற்றோரின் பாவ- புண்ணியம் பிள்ளைகளைச் சேருமா?"

அவனவன் செய்த புண்ணிய - பாபங்கள் அவனவனிடம் தோன்றி அலைக்கழிக்கவோ, மகிழ வைக்கவோ செய்யலாம். ஒருவரது செயல்பாடு, மற்றவரிடம் புண்ணியமாகவோ பாபமாகவோ மிளிராது. தன் வினை தன்னைச் சுடும்.

நீங்கள் குறிப்பிடும் சொற்பொழிவாளரது கூற்று ஏற்கத்தக்கது அல்ல. 'எட்டு வயது வரை’ என்ற நிர்ணயத்தை நாம் வகுக்க இயலாது. கருவறையில் இருந்து வெளி வந்ததும், ப்ராரப்த கர்மம் தனது வேலையைத் துவங்கிவிடும். பிறந்த குழந்தையின் முன் ஜன்ம செயல்பாடு பிராரப்த கர்மமாக உருவெடுக்கிறது. ஆக, எட்டு வயது வரைக்கும் பெற்றோரின்

முன்வினையே காரணம் என்பதை ஏற்கமுடியாது. முற்பிறவிகளில் சேமித்த கர்ம வினைகளின் பலன் என்ன என்பதையும், எப்போது என்பதையும், அதை உணரும் வேளையையும் சுட்டிக்காட்டுவது ஜோதிடமே (யதுபசிதமன்ய ஜன்மனி...). அப்படியிருக்க செயல்பாடு ஒருவனிடம்; அனுபவிப்பது மற்றொரு வன் என்கிற கோட்பாடு ஜோதிடத்துக்குப் பொருந்தாது.

ஆயிரக்கணக்கான மாடுகள் நிறைந்த மந்தையிலும் கன்றானது தனது தாயை அடையாளம் கண்டு இணைந்துவிடும். அதுபோல் முன்ஜென்ம கர்மவினையானது, செய்தவனை அடையாளம் கண்டு இணையும் என்கிறது ஜோதிடம். அவரவர் கர்மவினை அவரவரையே சேரும்.

தற்கால சூழலில் பாமரர்கள் மத்தியில் சாஸ்திர விழிப்பு உணர்வு குறைந்து காணப்படுவதே தவறான தகவல்கள் உருவாகக் காரணம். ஆகவே, எவர் எதைச் சொன்னாலும் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, அதில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொண்டு மற்றவற்றைத் தள்ளிவிட வேண்டும்.!

(சக்தி விகடனிலிருந்து)

!.......................................................!

பிரதோஷ நாளில், சிவபெருமானுக்கு உப்பில்லாத முழு உளுந்து வேக வைத்து நைவேத்தியம் செய்கின்றனரே! இது எதனால்?

இறையுருவத்தின் பார்வை பட்டதும் அந்த உணவு பரிசுத்தமாகி விடுகிறது. எனவே அந்த உணவை உட்கொள்ளப் பரிந்துரைக்கிறது சாஸ்திரம்.

தெய்வத்துக்கு படையலிட சமைக்கிறோம்; இறைவனுக்கும் உணவுக்கும் அங்கே ஒரு தொடர்பு வேண்டும்; உணவால் நமக்கு ஆரோக்கியம் தேவை; ஆன்மிகமும் அவசியம். ஆரோக்கியத்துடன் ஆன்மிகத்தையும் வளர்க்கும் உணவு வகைகளைப் பட்டியலிட்டுள்ளது தர்ம சாஸ்திரம். இதனை ஆயுர்வேதமும் ஆமோதிக்கிறது. தவிர, தர்மசாஸ்திரம் உளுந்தையும் பரிந்துரைக்கிறது.

இதேபோல், உப்பில்லாத நைவேத்தியத்தில் தவறு ஏதும் இல்லை. மாறாக, இப்படியான நைவேத்தியமே சிறப்பு எனப் போற்றுகிறது தர்ம சாஸ்திரம். இதனால்தான், உப்பு கலக்காத அன்னம், உளுந்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், பால், பழம் ஆகியவற்றை மகா நைவேத்தியம் என்கின்றனர்.

(சக்தி விகடனிலிருந்து)

......................................................................................................................................................................................................!!

''நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். ''ஆமாம்'' என்றார்.  ''நிம்மதியாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கும் ''ஆமாம்'' என்றார்.

''சரி, மிகப் பெரிய சந்தோஷமும் நிம்மதியும் எப்போது, எதனால் கிடைப்பதாக உணர்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

சற்றே யோசித்தவர், ''ஆபீஸ் செல்வதற்குப் புதிதாக பைக் வாங்கினேன். இப்போது ஆபீஸ் சென்று வருவது சுலபமாக, சுகமாக இருக்கிறது, சுவாமி!'' என்றார். தொடர்...ந்து, ''என் மகன் ஆசைப் பட்டபடி, அவனை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறேன். இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும்?'' என்றார். பிறகு அவரே, ''என் மனைவிக்குச் சமீபத்தில் தங்க வளையல் வாங்கித் தந்தேன். அவளது முகத்தில் அப்படியரு பிரகாசம்!'' என்று வெட்கத்துடன் தெரிவித்தார்.

''அவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா?'' என்று புன்சிரிப்புடன் கேட்டேன்.

''கிராமத்தில் உள்ள என் அப்பாவின் குடை, கிழிந்து, கம்பிகள் உடைந்துவிட்டன. அதேபோல், அம்மாவின் மூக்குக்கண்ணாடி வளைந்தும் நெளிந்துமாக, கீழே குனிகிறபோதெல்லாம் விழுந்துவிடுகின்றன. போன மாதம் ஊருக்குச் சென்றபோது, அப்பாவுக்கு குடையும் அம்மாவுக்கு ஒரு மூக்குக் கண்ணாடியும் வாங்கிக் கொடுத்தேன். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் மனதின் பூரிப்புக்கும் நிறைவுக்கும் அளவே இல்லை'' என்று சொல்லும்போது அந்த அன்பரின் கண்கள் கலங்கியிருந்தன.

மோட்டார் சைக்கிள், கல்லூரிப் படிப்பு, தங்க வளையல் எல்லாமே காஸ்ட்லிதான்! ஆனால், அப்பாவுக்கு வாங்கித் தந்த குடையிலும், அம்மாவின் மூக்குக் கண்ணாடியிலும் அத்தனை நிம்மதியும் சந்தோஷமும் பரவிக் கிடக்கின்றன.

பிறந்தது முதல் இன்றைய நாள் வரையிலான நம்முடைய இந்தப் பயணத்துக்கு, அவர்கள்தானே வித்து! வேர்களுக்கு நீருற்றினால் தானே மரத்துக்குத் தெம்பு?!

(சக்தி விகடனிலிருந்து)