|
| வார ராசிபலன்: 17-05-2013 முதல் 23-05-2013 வரை
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.
3-ல் சனியும், ராகுவும், 9-ல் செவ்வாயும், 10-ல் சூரியன், புதன் ஆகியோரும் உலவுவது விசேடமாகும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
தொலைதூரத் தொடர்பு பயன்படும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப்பணியாளர்களது நோக்கம் நிறைவேறும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாணவர்களது திறமை பளிச்சிடும். ரேடியோ, வீடியோ, டி.வி., தொலைபேசி போன்ற தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும்.
பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பொது நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறுவதால் புனிதப்பணிகளில் ஈடுபாடு கூடும். அரசாங்கத்தாரால் கெளரவிக்கப்படுவீர்கள்.
அரசு சார்ந்தவர்கள் உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவார்கள். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். செயல்திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட தேதி: மே. 20, 22, 23.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு.
எண்கள்: 1, 4, 5, 6, 8, 9. |