# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #

வார ராசிபலன்: 17-05-2013 முதல் 23-05-2013 வரை

கன்னி: உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய.

புதன், குரு, சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்கள் பாக்கிய ஸ்தானமான 9-ல் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வ தரிசனமும், சாது தரிசனமும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.

விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தொலைதூரத் தொடர்பால் நலம் பெறுவீர்கள். பண வரவு திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். முயற்சி வீண்போகாது. பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். திரவப் பொருள் லாபம் தரும்.

சுபச் செலவுகள் ஏற்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

வாரப்பின்பகுதியில் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும். வீண்வம்பு வேண்டாம். பிற மொழி, மத, இனக்காரர்களிடம் விழிப்புத் தேவை. 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். இளைய சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மே. 22, 23.

திசைகள்: வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 3, 5, 6.