வார ராசிபலன்: 17-05-2013 முதல் 23-05-2013 வரை
விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய.
6-ல் செவ்வாய், கேது ஆகியோரும், 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எலக்ட் ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ், நெருப்பு, வெடிப்பொருள், தளவாடங்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும்.
எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். ஆசிரியர்களது நோக்கம் நிறைவேறும். மக்களால் நலம் உண்டாகும்.
7-ல் சூரியனும், சுக்கிரனும், புதனும் இருப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். பக்குவமாகப் பேசிச் சமாளிப்பது நல்லது.
12-ல் சனியும் ராகுவும் இருப்பதால் வீண்செலவுகளையும் அலைச்சலையும் தவிர்க்கவும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே. 20, 22.
திசைகள்: தெற்கு, வடமேற்கு, வடகிழக்கு.
எண்கள்: 3, 7, 9. |