# குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # தமிழகம் முழுவதும் 34 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம் # சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் முடக்கம்? # பட்டாசு விபத்தில் முதல்வர் நிவாரண நிதி வழங்கவில்லை: எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் # மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை #

வார ராசிபலன்: 23-05-2013 முதல் 30-05-2013 வரை

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய.

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும், 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பாகும்.
எதிர்ப்புக்களை முறியடித்து வாழ்வில் வெற்றி காண்பீர்கள். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும்.

அரசாங்கத்தாரால் கெளரவிக்கப்படுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் லாபம் தரும். புதியவர்கள் உதவுவார்கள். கறுப்பு, கருநீலநிறப் பொருட்கள் லாபம் தரும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். 5-ல் கேதுவும், 6-ல் குருவும் சுக்கிரனும் இருப்பதால் மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சங்கடம் உண்டாகும்.

மருத்துவச் செலவுகள் ஏற்படும். கலைஞர்களுக்குச் சோதனைகள் சூழும். மாதர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். 27-ஆம் தேதி முதல் புதனும் 29-ஆம் தேதி முதல் சுக்கிரனும் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது.

கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். கூட்டாளிகளால் பிரச்னைகள் ஏற்படும். எதிரிகள் சற்று அதிகமாவார்கள். யாரிடத்திலும் விழிப்புடன் பேசிப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: மே. 27, 29, 30.

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு.

எண்கள்: 1, 4, 5, 8, 9.