வார ராசிபலன்: 17-05-2013 முதல் 23-05-2013 வரை
மகரம்: உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய.
5-ல் குரு, சுக்கிரன், 10-ல் சனி, ராகு ஆகியோர் உலவுவதால் உங்கள் புத்திசாலித்தனமும் தோற்றப்பொலிவும் செயல்திறமையும் பளிச்சிடும். பணநடமாட்டம் அதிகமாகும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும்.
மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் நலம் பெறுவீர்கள். வேலையாட்கள் உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும்.
மருத்துவர்களது நிலை உயரும். ஆசிரியர்களது எண்ணம் ஈடேறும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். மாதர்களுக்கு ஆடை, அணிமணிகள் சேரும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். மந்திர சித்தியும், குரு உபதேசமும் கிடைக்கும் நேரமிது. பொன்னும் பொருளும் சேரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.
திருமணம் ஆனவர்களுக்கு இல்லற வாழ்க்கை திருப்திகரமாக இருந்துவரும். 4-ல் செவ்வாயும் கேதுவும் 5-ல் சூரியனும் உலவுவதால் தாயாராலும் மக்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 22, 23.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, தென்மேற்கு.
எண்கள்: 3, 4, 5, 6, 8. |