# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #

 வார ராசிபலன்: 24-05-2013 முதல் 30-05-2013 வரை

கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.

3-ல் கேதுவும், 4-ல் புதனும் சுக்கிரனும் உலவுவதால் எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். புகழும் பொருளும் கூடும். சுகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். 4-ல் சூரியனும் செவ்வாயும் குருவும் உலவுவதால் அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 9-ல் சனியும் ராகுவும் இருப்பதால் தர்ம சிந்தனை உண்டாகும். 27-ஆம் தேதி முதல் புதன் 5-ஆமிடம் மாறினாலும் நலம் புரிவார். 29-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறி, புதனோடு கூடுவதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். புத்திசாலித்தனம் கூடும். கலைகளில் ஈடுபாடு கூடும். பொழுது போக்கு அம்சங்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மே 27. 30 (இரவு).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

எண்கள்: 5, 6, 7.