|
| மாத ராசிபலன்: 2013 மே 1 முதல் 31 வரை
கடகம்:
உங்கள் ஜன்ம ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய், புதன், கேது ஆகியோரும் 11-ல் குருவும் உலவுவது விசேடமாகும். எடுத்த காரியங்களில் சுலபமாக வெற்றி பெறுவீர்கள். அரசு ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் மூலம் வருமானம் கிடைத்துவரும். வியாபாரம் செழிக்கும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். எலக்ட் ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும்.
பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நிகழும். நண்பர்கள் உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், இரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். 4-ல் சனியும் ராகுவும் இருப்பதால் தாய் நலனில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சுபிட்சம் கூடும். 13-ஆம் தேதி முதல் புதன் 11-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் மேலும் அதிகமாகும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவதால் செல்வச் செழிப்பு அதிகமாகும். பல வழிகளில் பணம் வந்து பையை நிரப்பும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் நலம் கூடும். 27-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 29-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறினாலும் நலம் புரிவார். 31-ஆம் தேதி முதல் குரு 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. என்றாலும் சுபக்கிரகங்கள் 12-ல் கூடுவதால் சுப விரயமே ஆகும்.
புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான நற்பலன்கள் இம்மாதத்தில் உண்டாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: மே.1, 6, 7, 12, 13, 15, 16, 20, 22, 23, 27, 29, 30 (பகல்).
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 9. |