# சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணாசாலை கிளையில் சிபிஐ சோதனை # யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை # வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம் # இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம் # நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் # புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி # பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை # செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம் #

மாத ராசிபலன்: 2013 ஜூன் 1 முதல் 30 வரை

- சந்திரசேகரபாரதி

துலாம்:

உங்கள் ராசிக்கு 9-ல் புதன், குரு, சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்கள் உலவுவது விசேடமாகும். சகல நலங்களையும் நீங்கள் பெறுவீர்கள். உடல் நலம் சீராகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். போட்டிகளில் வெற்றி கிட்டும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும்.

இதுவரையிலும் தடைப்பட்டு, தாமதப்பட்டு வந்த சுப காரியங்கள் இனி ஜாம் ஜாம் என்று மிக விமரிசையாக இனிது நடக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சந்தர்ப்பம் கனிந்துவரும்.

தான, தர்மப்பணிகளில் நல்ல மனதுடன் ஈடுபடுவீர்கள். இரக்க சுபாவம் கூடும். வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத்திரவியங்களின் சேர்க்கை நிகழும்.

தந்தையால் அனுகூலம் உண்டாகும். சாதுக்கள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது ஆசிகளைப் பெறுவீர்கள். கோயில், குளம், தீர்த்த யாத்திரை என்று சுற்றி வருவீர்கள்.

தொலைதூரப் பயணம் மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். அதனால் அனுகூலமும் உண்டாகும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவதால் புனிதப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 22-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும்.

7-ல் கேதுவும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை குறையும். விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம் என்பதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியமாகும். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாரம், வெடிப் பொருட்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை. உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். கேதுவுக்கும் செவ்வாய்க்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

சுவாதி, விசாக நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 3, 12, 19, 20, 23, 26, 27, 28.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.

எண்கள்: 3, 5, 6.