# கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி # தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு # பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு # # எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல் # 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு # ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? # சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிக்கு செல்வது யார்? இந்தியா- இலங்கை இன்று பலபரீட்சை # சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதியில் இங்கிலாந்து; பரிதாபத்தில் தென் ஆப்பிரிக்கா #

மாத ராசிபலன்: 2013 ஜூன் 1 முதல் 30 வரை

- சந்திரசேகரபாரதி

கும்பம்:

புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் பளிச்சிடும். மனதில் உற்சாகம் கூடும். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலமுண்டாகும். வியாபாரிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். உத்தியோகஸ்தர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள்.

திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தெய்வப்பணிகள் நிறைவேறும். மந்திர சித்தி உண்டாகும். தனவந்தர் சகாயம் கிட்டும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். ஞான மார்க்கத்திலும், பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். புதிய ஒப்பந்தங்களும் கைக்கு வந்து சேரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். மாணவர்களது நிலை உயரும். 4-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவதாலும், 9-ல் சனியும் ராகுவும் இருப்பதாலும் பெற்றோர் நலம் பாதிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும்.

15-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. செய்துவரும் தொழிலில் முழுக்கவனம் செலுத்தவும். 22-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவதால் பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் சோதனைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும். ஆடவர்களுக்குப் பெண்களால் மதிப்பு குறையும். கேளிக்கை,உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. பெற்றோரால் பிரச்னைகள் சூழும். பெற்றோர் நலனுக்காக செலவு செய்ய வேண்டிவரும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 3, 8, 12, 19, 20, 23, 26, 27, 28.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு.

எண்கள்: 3, 5, 6, 7.