# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #

மாத ராசிபலன்: 2013 மே 1 முதல் 31 வரை

மீனம்:

புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் ஓரளவு சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு நல்ல திருப்பம் உண்டாகும். மாதர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். 2-ல் சூரியன், செவ்வாய், கேது ஆகியோர் உலவுவதால் மற்றவர்களது மனம் புண்படும்படி சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது.

குடும்பத்தாருடன் சுமுகமாகப் பழகவும்.

குரு 3-ல் இருப்பதாலும், சனியும் ராகுவும் 8-ல் இருப்பதாலும் உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் தடைப்படும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். கண், வாய், பல், முகம் மற்றும் மறைமுக நோய்நொடிகளுக்கு ஆளாக நேரலாம். உடல்நலனில் கவனம் செலுத்தவும். 4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

13-ஆம் தேதிமுதல் புதன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 15-ஆம் தேதி முதல் சூரியனும் 23-ஆம் தேதி முதல் செவ்வாயும் 3-ஆமிடம் மாறுவதால் வெற்றிவாய்ப்புக்கள் அதிகரிக்கும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். போட்டி,பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்புத் துறையினர்கள் வளர்ச்சி காண்பார்கள். 27-ஆம் தேதி முதல் புதனும், 29-ஆம் தேதி முதல் சுக்கிரனும் 4-ஆமிடம் மாறுவதால் சுகானுபவம் உண்டாகும். வியாபாரம் பெருகும். நண்பர்கள், உறவினர்களது தொடர்பு பயன்படும். 31-ஆம் தேதி முதல் குரு 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் தொழில் ரீதியாக வளர்ச்சி காண வழிபிறக்கும்.

பூரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: மே.1, 4, 6, 7, 12, 16, 20, 22 (பகல்), 27, 29, 30, 31.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 5, 6.