விஜய வருஷம் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
தமிழ் வருடங்கள் 60 ஆகும். பிரபவ முதல் அக்ஷய வரை. இந்த வரிசையில் விஜய 27-ஆவது வருடம் ஆகும்.
திருக் கணிதப்படி 13-4-2013, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தி, கிருத்திகை நட்சத்திரம், அமிர்த யோகம், ஆயுஷ்மான யோகம், வணிஜை கரணம், பின்னிரவு 1 மணி, 27 நிமிடத்துக்குத் தமிழ்ப் புத்தாண்டு விஜய வருடம் பிறக்கிறது.
இந்த விஜய வருடத்தில் அரசாங்கத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். மக்களுக்கு அனுகூலம் ஏற்படும். புனிதமான காரியங்கள் நிகழும். நல்ல மழை பெய்யும். தானியங்கள் நன்கு விளையும். வெற்றிகள் குவியும்.
விஜய வருடத்தின் ராஜா குருவாக இருக்கிறார். அந்தணர்களுக்கு சந்தோஷம் உண்டாகும். மக்களுக்குப் பக்தி அதிகமாகி, தெய்வ காரியங்கள் நிகழும். ஹோமம், கோயில் குடமுழுக்கு வைபவங்கள் நடக்கும். பழ வகைகள் அதிகம் விளையும். பால் வளம் பெருகும். சுபிட்சம் கூடும். நோய்நொடிகள் குறையும்.
விஜய வருட ஆரம்ப கிரகநிலை: மகர லக்னம், மூன்றில் புதன்; நான்கில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், கேது; ஐந்தில் சந்திரன், குரு; பத்தில் சனி, ராகு.
யோக காரகரான சுக்கிரன் 4-ல் அமர்ந்து இருப்பதால் கேளிக்கை, உல்லாச, பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகரிக்கும். தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். பொது நலப்பணிகள் நிறைவேறும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.

சனி 10-ல் ராகுவுடன் இருப்பதால் கறுப்பு நிறப்பொருட்கள், விவசாயம், நிலக்கரி, எரிபொருள், வானியல் ஆராய்ச்சி, எண்ணெய் வகையறாக்கள், தாதுப் பொருட்கள், தோல் பொருட்கள் மூலம் ஆதாயம் அதிகம் கிடைக்கும். போக்குவரத்து சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். ஏற்றுமதி-இறக்குமதி துறைகள் மூலம் அதிகம் ஆதாயம் கிடைக்கும். அந்நிய செலாவணி அதிகமாகும்.
புதிய தொழிற்சாலைகள் தோன்றும். வேலை வாய்ப்பு பெருகும். கால்நடைகள் அபிவிருத்தி ஆகும்.
புதன் 3-ல் இருப்பதால் வியாபாரிகளுக்குச் சோதனைகள் ஏற்படும்.
குருவும் சந்திரனும் 5-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் அபிவிருத்தி உண்டாகும். பங்கு வர்த்தகம் மற்றும் ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும்.
செவ்வாயும், சூரியனும் 4-ல் இருப்பதால் மின்சாரம், நெருப்பு, ஆயுதங்கள், வெடிப் பொருட்கள், தளவாடங்கள் மூலம் ஆதாயம் பெருகும்.
கேது 4-ல் இருப்பது சிறப்பாகாது. விநாயகரை வழிபடுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் காத்துக் கொள்ளலாம்.
மொத்தத்தில் இந்த தமிழ்ப்புத்தாண்டில் மழை வளம் காரணமாக நாடு சுபிட்சமாக இருக்கும்.
வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
| மேஷம் |
ரிஷபம் |
மிதுனம் |
கடகம் |
 |
 |
 |
 |
| சிம்மம் |
கன்னி |
துலாம் |
விருச்சிகம் |
 |
 |
 |
 |
| தனுசு |
மகரம் |
கும்பம் |
மீனம் |
 |
 |
 |
 |
|