விஜய வருஷம் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, ராகு; 8-ல் புதன்; 9-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், கேது; 10-ல் சந்திரன், குரு சஞ்சரிக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிறருக்கு உதவுவீர்கள். அரசாங்கப் பணிகள் நிறைவேறும். புதியவர்கள் உங்களுக்கு நண்பர்கள் ஆவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். தொலைதூரப் பயணம் பயன்படும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள்.
அயல்நாட்டுத் தொடர்பு வலுப்பெறும். தெய்வப் பணிகள் நிறைவேறும். தந்தை நலம் சீராகும். மே 31 முதல் குரு 11-ஆமிடம் மாறுவது விசேடமாகும். தொட்டது பொன் ஆகும் நேரமிது. நீண்ட நாளைய எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். பண நடமாட்டம் அதிகமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். பொன்னும் பொருளும் சேரும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும்.
சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் கிட்டும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். பேச்சாற்றலால் பிறரைக் கவருவீர்கள். தொழில் அதிபர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மனத்திற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும்.
பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும். ஆதித்தனை தினமும் காலைவேளையில் வழிபடவும்.
.jpg)
|