Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தஞ்சாவூரில் 89-ம் ஆண்டு கருடசேவை...!

ஞ்சாவூர் ராஜவீதிகளில் 23  கருட சேவை இன்று நடைபெற்றது. இதில் யோக நரசிம்மர், கலியுக வரதரராஜர், வெங்கடேசன் பெருமாள், நவநீத கிருஷ்ணன் என இன்னும் பல பெருமாள் கோவில்களில் இருந்து பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக வடக்கு வீதி, தெற்கு வீதி, கீழ வீதி, மேல வீதி என நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இது குறித்து கருட சேவை வீதியுலாவில் கலந்துகொண்ட பட்டாச்சாரியார் சீனிவாசன் நம்மிடம், ''ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அவிட்ட நட்சத்திரம் அன்று கருட சேவை நடைபெறும். அந்த காலத்தில் பள்ளியாகிரஹம் அருகே உள்ள நரசிம்ம பெருமாள் கோவில்களில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மணிகுண்ட பெருமாள், நீல மேக பெருமாள், நரசிம்ம பெருமாள் ஆகியோருக்கு அலங்காரம் செய்யபட்டு உற்சவம் நடைபெறும். இந்த பெருமாள் கோவில் 108 திவ்யஸ்தலங்களில் ஒன்றாகும். அந்த உற்சவ காலங்களில் பெருமாளை சேவிக்க முடியாமல் இருப்பவர்களுக்காக  தொடங்கப்பட்டதுதான் இந்த கருடசேவை.  முதலில் மூன்று பெருமாள்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். காலப்போக்கில் தஞ்சாவூரை சுற்றியுள்ள கோவில்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து கருட சேவையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆரம்பித்தனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாள் பெருமாள்களுக்கு திருமஞ்சன அபிஷேகம் செய்யப்படும். இரண்டாம் நாள் கருட சேவை நடைபெறும். மூன்றாம் நாள் நவநீத கிருஷ்ணன் என்று சொல்லப்படுகிற பெருமாள் கையில் வெண்ணெய் குடத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு வெண்ணெய் தாழி ஊர்வலம் நடைபெறும். இதிலும் அனைத்து கோவில்களில் இருந்தும் பெருமாள் கலந்து கொள்வர். .கடந்த 89 வருடமாக இந்த கருட சேவை சிறப்பாக நடைபெற்று வருகிறது.  மூன்று நாட்களும் நான்கு வீதிகளும் விழாக்கோலத்துடன் கலகலப்பாக  இருக்கும். ஏராளமான பக்தர்கள் இதை காணவருவார்கள்'' என்றார் உற்சாகம் பொங்க.

மேலும் அவர் கூறுகையில், “கருட சேவைக்கு வந்த பக்தர் ஒருவரிடம் பேசினோம், ''பெருமாள் சாதாரண வாகனத்தில் வருவதை தரிசித்தாலே எல்லாம் கஷ்டங்களும் நீங்கும். கருட வாகனத்தில் பெருமாள் வருவதை தரிசிப்பது கூடுதல் பலனை தரும். பொதுவாக அட்சய திருதியை அன்றுதான் பெருமாள் கருட வாகனத்தில் ஏறுவார். அதனால்தான் அந்த நாளை சிறந்த நாளாக கொண்டாடுகிறோம். எனவே கருட வாகனத்தில் பெருமாள் நகர் முழுவதும் வருவதால், மக்கள் பிரச்னைகள் நீங்கி எல்லாவிதமான சுபிட்சங்களையும் அடைவார்கள் என்பது நம்பிக்கை'' என்றார் பரவசத்துடன்.

- கட்டுரை, படங்கள்: கே.குணசீலன்