Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் கும்பாபிஷேகம்... நிகழ்ச்சி நிரல்

108 திவ்யதேசங்களில் தொண்டை மண்டலத்தில் சிறப்புப்பெற்ற ப்ருந்தாரண்ய கேஷ்த்திரம் என்கிற திருவல்லிக்கேணி சென்னை மாநகரின் இதயப்பகுதியாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் பார்த்தனின் தேர்முன் நின்ற சாரதியாக அருள்மிகு ருக்மிணீ ஸமேத ஸ்ரீவேங்கடகிருஷ்ணன், என்னையாளுடையப்பனாக ஸ்ரீரங்கநாதர், தெள்ளிய சிங்கமாக ஸ்ரீநரசிம்மர், யானையின் துயர் தீர்த்தவனாக ஸ்ரீகஜேந்திர வரதர், சக்கரவர்த்தி திருமகனாக ஸ்ரீகோதண்டராமர் ஆக ஐந்து எம்பெருமான்கள் கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றனர். பேயாழ்வார்,  திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திவ்யதேசத்தில் திருப்பணி கைங்கரியங்கள் நன்கொடையாளர்களால் பூர்த்தியடைந்து, நிகழும் மன்மத ஆண்டு வைகாசி 25ம் தேதி (08.6.2015) திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. வைகாசி 29ம் தேதி(12.6.2015) வெள்ளிக்கிழமை, மிதுன லக்னத்தில்,ரேவதி நட்ச்சத்திரத்தில்,காலை 7.00 மணிக்குமேல் 8.00 மணிக்குள் ஸ்ரீபார்த்தசாரதிஸ்வாமி, ஸ்ரீஆண்டாள் ஸ்ரீவேதவல்லித்தாயார், ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீமணவாளமாமுனிகள், ஆழ்வார், ஆச்சார்யர்கள் விமானங்கள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாஸம்ப்ரோக்ஷணம் ஸ்ரீவைகாநஸ ஆகம முறைப்படியும், ஸ்ரீதென்னாச்சார்ய ஸம்ப்ரதாயப்படியும் விமரிசையாக நடைபெற உள்ளது.

மஹாகும்பாபிஷேகம் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

 12.6.2015 - வைகாசி 29-வெள்ளிக்கிழமை,

நேரம் : காலை - 3.00 - விஸ்வரூபம்,கும்பாராதனம்,காலசந்தி

காலை - 4.30  - 8வது காலஹோமம்,திவ்யபிரபந்தசேவை,வேதபாராயணம்

காலை - 6.00 - மஹாபூர்ணாஹீதி

காலை - 6.30 - பெருமாள் குடும்பத்துடன் ஸன்னதியில் எழுந்தருளல்

காலை - 7.00 - 8.00 - விமானங்கள்,ராஜகோபுரம்,மஹா சம்ப்ரோக்ஷணம்

காலை - 8.00 - 9.00 - மூலஸ்தானமோர்த்திகள் களா ஆவாஹனம்,மஹா நிவேதனம்

காலை - 10.00-11.00 - சோபனாக்ஷதை, மஹா ஆசீர்வாதம், வேத சாற்றுமறை, திவ்யபிரபந்த சாற்றுமறை, தீர்த்தம், பிரஸாதம் வினியோகம்

காலை - 11.30 - பொதுஜன சேவை

மாலை - 4.30 - ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு

மாலை - 6.00 - ஶ்ரீவேதவல்லித்தாயார்,ஸ்ரீரங்கநாதர் உள்புறப்பாடு

இரவு - 8.00 - ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி.ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீ உடையவர்,ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவீதி புறப்பாடு.

- ஜெயபிராகஷ்