Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரவிலும் ஜொலிக்கும் விராலிமலை முருகன் கோயில்!

புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் கீழ் இயங்கிவரும் விராலிமலை முருகன் கோயில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற திருத்தலம். இங்குதான் முருகப்பெருமானுக்கு சுருட்டு நைவேத்யம் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி விழா , அருணகிரிநாதர் இசை விழா மற்றும் வருடத்தின் முக்கியமான விழா நாட்களிலும் பக்தர் கூட்டம் அலைமோதும்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரனுக்கு மட்டுமல்ல குரங்குகளுக்கும் பஞ்சமிருக்காது. கோயிலின் கோபுரங்களில் இருக்கும் விளக்குகளின் ஒயர்களை குரங்குகள் அடிக்கடி துண்டித்துவிடுவதால் இரவில் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். அதனால் இவ்வாலயத்தில் ஒரு கமிட்டி போடப்பட்டு பக்தர்களின் நன்கொடையால சுமார் 5 கிலோ வாட்ஸ் சோலார் தகடுகள் போடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் கோவில் இரவிலும் ஜொலிக்கத்துவங்கி இருக்கிறது. கோயிலில் மொத்த விளக்குகளும் சோலார் தகடுகள் மூலம் இயங்குவதற்கு கோயில் நிர்வாகத்தினர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக விராலிமலை கோயிலின் கண்காணிப்பாளர் திரு.மாரிமுத்து அவர்கள் தெரிவித்தார். பழநி முருகன் கோயிலிலும் இதே போல சோலார் தகடுகள் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல மற்ற கோயில்களிலும் சோலார் தகடுகள் போடப்பட்டால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்தானே!

- இ. ராஜவிபீஷிகா,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்