Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லையப்பர் கோயில் 511வது ஆனித்தேர்த் திருவிழா!

தென்  மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா ஜுன் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் விழா நடந்து வருகிறது.   விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 10ம் நாள் திருவிழாவான இன்று (30.06.15) காலை 8.30  மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க,  511 வது தேரோட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது. தொடர்ந்து அம்பாள்,  விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட  தேர்கள் வலம் வர தயாராக உள்ளன. 

செய்தி  மற்றும் படங்கள்: ஆ. நல்லசிவன்