Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிஷிவந்தியம் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ள்ளக்குறிச்சியில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம் ரிஷிவந்தியம். இங்கே உள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் மூலவரின் லிங்கத்தில் அம்மனின் திருஉருவம் அமைந்துள்ளது. இதை, சாதாரணமாக நாம் காணமுடியாது.
இந்த லிங்கத்துக்கு தினமும் அர்த்தசாம பூஜையின்போது தேனால் அபிஷேகம் செய்வர். அப்போது, லிங்கத்தின் பாணப் பகுதியில் அம்மனின் உருவம் மெள்ள வெளிப்படும்.
இத்தகைய சிறப்புமிக்க இவ்வாலயத்தில் கடந்த 22 தேதி முதல் பிரம்மோற்சவம் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய அம்சமான தேர்த்திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

படங்கள்: தே. சிலம்பரசன்