Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆவணித் திருவிழா - மாணிக்கவாசகர் மதுரைக்குப் புறப்படுகிறார்!

“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்ற பழமொழிக்குரிய திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் பாடி அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த ஊர் திருவாதவூர். இவர் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் அமைச்சராக இருந்தவர் .இத்திருத்தலம் மதுரையிலிருந்து சுமார் 24 கி.மி தூரத்தில் அமைந்துள்ளது இங்குள்ள் திருக்கோவில் இராசசேகரபாண்டியனால் கட்டப்பட்டது .

 ''இங்கு அருளும் மாணிக்கவாசகர் ஆவணி மாதத்தில் மதுரைக்கு புறப்பட்டு செல்வது ஐதீகம். விழாவின் தொடர்ச்சியாக மதுரையில் முக்கிய நகரின் வழியாக சென்று மண்டபங்களில் பக்தர்களுக்கு அருள்புரிந்து விட்டு இன்று மாலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருகோவில் வந்துசேர்வார் .அடுத்தடுத்த நாட்களில் குதிரை கயிரு மாறுதல் லீலை ,நரியை பரியாக்கிய திருவிளையாடல் ,பிட்டுத்தோப்பில் பிட்டுத்திருவிழா போன்று விழாக்களை முடித்துவிட்டு ஆவணி 17அன்று திருவாதவூரூக்கு வந்துசேர்வார்.'' என்றார் பட்டர் கணபதி.

கட்டுரை, படங்கள்: சே.சின்னத்துரை, மதுரை